Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • முழு ஊரடங்கு எதிரொலி: மதுரையில் இஞ்சி பூண்டு விலை கடும் உயர்வு

முழு ஊரடங்கு எதிரொலி: மதுரையில் இஞ்சி பூண்டு விலை கடும் உயர்வு

By: Monisha Thu, 02 July 2020 3:09:51 PM

முழு ஊரடங்கு எதிரொலி: மதுரையில் இஞ்சி பூண்டு விலை கடும் உயர்வு

மதுரையில் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருவதால் மதுரை மநகராட்சி, பரவை பேரூராட்சி, கிழக்கு, மேற்கு மற்றும் திருப்பரங்குன்றம் ஊராட்சி ஒன்றியங்கள் ஆகிய பகுதிகளில் முழு ஊரடங்கு அமலில் உள்ளது. இதனால் இங்கு அத்தியாவசிய பொருட்கள் விற்பனை செய்யும் கடைகள் மட்டும் திறந்திருந்தன. இந்த கடைகள் மதியம் 2 மணி வரை மட்டும் திறந்திருக்க அனுமதி வழங்கப்பட்டிருந்தது.

மதுரையில் இருந்து மளிகை மற்றும் பலசரக்கு பொருட்கள் விருதுநகர், சிவகங்கை, ராமநாதபுரம், திண்டுக்கல் ,தேனி, தூத்துக்குடி, நெல்லை, தென்காசி மற்றும் கன்னியாகுமரி ஆகிய தென்மாவட்டங்களுக்கு அனுப்பி வைக்கப்படுகின்றன. மொத்த வியாபார கடைகளை நள்ளிரவு 1 மணி முதல் அதிகாலை 6 மணி வரை மட்டும் திறந்திருக்க அனுமதித்துள்ளனர்.

curfew,ginger,garlic,price,grocery merchants ,முழு ஊரடங்கு,இஞ்சி,பூண்டு,விலைசில்லறை வியாபாரிகள்

இந்த நேரத்தில் வெளி மாவட்டங்களில் இருந்து வியாபாரிகள் வந்து செல்வதில் மிகுந்த சிரமங்களை எதிர்கொள்ள வேண்டியுள்ளது. வாடகை லாரி, வேன் சேவைக்கு முற்றிலும் தடைவிதிக்கப்பட்டுள்ளது. இதனால், பெரும்பாலான மொத்த வியாபாரிகள் கடந்த 5 நாட்களாக கடைகளை திறக்கவில்லை. இதனால் தட்டுப்பாடு காரணமாக அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்ந்துள்ளது.

குறிப்பாக சில்லறை வியாபாரிகள் கூடுதல் விலைக்கு அத்தியாவசிய பொருட்களை விற்பனை செய்கின்றனர். அதாவது, மொத்த விலையில் கிலோ ரூ.80-க்கு விற்பனை செய்யப்படும் இஞ்சி மாவட்டத்தில் உள்ள சில்லறை விற்பனை கடைகளில் 100 கிராம் 30 ரூபாய்க்கு (ஒரு கிலோ ரூ.300) விற்பனை செய்யப்படுகிறது. இமாசல பிரதேச வெள்ளைபூண்டு சிறிய ரகம் மொத்த விலையில் கிலோ ரூ.100-க்கும், சுமார் ரகம் ரூ.150-க்கும், பெரிய ரகம் ரூ.200-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. ஆனால், சில்லறை விற்பனை கடைகளில் சிறிய ரக வெள்ளை பூண்டு கிலோ ரூ.200-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

Tags :
|
|
|
|