Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • கூகுள் ஊழியர்கள் 2021ம் ஆண்டு ஜுன் மாதம் வரை வீட்டிலிருந்தே பணியாற்றலாம்

கூகுள் ஊழியர்கள் 2021ம் ஆண்டு ஜுன் மாதம் வரை வீட்டிலிருந்தே பணியாற்றலாம்

By: Nagaraj Wed, 29 July 2020 12:12:25 PM

கூகுள் ஊழியர்கள் 2021ம் ஆண்டு ஜுன் மாதம் வரை வீட்டிலிருந்தே பணியாற்றலாம்

வீட்டிலிருந்தே பணியாற்றுங்கள்... 2021ஆம் ஆண்டு ஜூன் மாதம் வரை வீட்டிலிருந்தே பணியாற்றலாம் என்று கூகுள் நிறுவனம் தனது ஊழியர்களுக்கு அனுமதி வழங்கியுள்ளது.

கொரோனா பரவலையடுத்து உலகம் முழுவதும் ஐடி அலுவலகங்கள் உள்ளிட்ட பல்வேறு நிறுவனங்கள் வீட்டிலிருந்தே தனது ஊழியர்களைப் பணியாற்றுமாறு தெரிவித்துள்ளன. இந்த நிலையில், கொரோனா வைரஸ் பரவல் காரணமாக 2021 ஜூன் வரை ஊழியர்களுக்கு வீட்டிலிருந்தே பணியாற்றும் காலக்கெடுவை நீட்டித்துள்ளது கூகுள் நிறுவனம்.

from home,google,permission,employees,will benefit ,வீட்டில் இருந்தே, கூகுள், அனுமதி, பணியாளர்கள், பயன்பெறுவர்

இது தொடர்பாக கூகுள் தலைமை நிர்வாகி சுந்தர் பிச்சை ஊழியர்களுக்கு அனுப்பிய மின்னஞ்சலில், ‘ஊழியர்கள் தங்களின் வருங்கால செயல்பாடுகளைத் திட்டமிட்டுக் கொள்ளும் வகையில், வீட்டிலிருந்து பணியாற்ற அனுமதியை நீட்டிக்கிறோம்.

இதன் மூலம் அலுவலகம் வந்து பணியாற்றத் தேவையில்லாத பொறுப்பில் இருக்கும் ஊழியர்கள் அனைவரும், 2021 ஜூன் 30 வரை வீட்டிலிருந்தே பணியாற்றலாம்’ என்று தெரிவித்துள்ளார்.

இதன் மூலம் உலகம் முழுவதும் சுமார் இரண்டு லட்சம் கூகுள் ஊழியர்கள் மற்றும் ஒப்பந்ததாரர்கள் பயன்பெறுவர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags :
|