Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • கூகுள் ப்ளே ஸ்டோர், ஆப்பிள் செயலியில் இருந்து பப்ஜி நீக்கம்

கூகுள் ப்ளே ஸ்டோர், ஆப்பிள் செயலியில் இருந்து பப்ஜி நீக்கம்

By: Nagaraj Sat, 05 Sept 2020 09:33:32 AM

கூகுள் ப்ளே ஸ்டோர், ஆப்பிள் செயலியில் இருந்து பப்ஜி நீக்கம்

கூகுள் செயலியில் இருந்து பப்ஜி நீக்கப்பட்டது... பப்ஜி ஆன்லைன் விளையாட்டினை நாள் பகல் பாராது, அனைவரும் விளையாடிவந்த நிலையில், சமூக ஆர்வலர்கள் இது மாணவர்களை சீரழிப்பதாய் புகார் கூற, இந்திய அரசாங்கம் ஒரு நாளைக்கு 6 மணி நேரத்திற்கு மேல் விளையாட முடியாதபடி சமீபத்தில் தடை செய்தது.

கொரோனாவால் உலக நாடுகள் பலவற்றில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில் பொதுமக்கள் வீட்டிற்குள்ளே முடங்கி உள்ளனர். இந்தநிலையில் டிவி, இணையம், மொபைல் போன்றவையே இவர்களுக்கு பொழுதுபோக்கு அம்சமாக உள்ளது.

google play store,babji,removal,shock,information ,
கூகுள் பிளே ஸ்டோர், பப்ஜி, நீக்கம், அதிர்ச்சி, தகவல்கள்

இந்த நிலையில் பப்ஜி கேம் விளையாடுவோரின் எண்ணிக்கையானது பல மடங்கு அதிகரித்துள்ளது. ஆனால் இந்த நிலையில் இந்தியாவில் பப்ஜி கேம் தடை செய்யப்பட்டுள்ளது.

அதாவது சீன ஆப்கள் ஏற்கனவே 59 செயலிகள் தடைசெய்யப்பட்ட நிலையில் இந்தியாவில் பப்ஜி உள்ளிட்ட 118 செயலிகளுக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

அதாவது, கூகுள் பிளே ஸ்டோர் மற்றும் ஆப்பிளின் ஆப் ஸ்டோரில் இருந்து பப்ஜி நீக்கப்பட்டுள்ளது. பப்ஜிக்கு நீக்கப்பட்டுள்ள நிலையில் பப்ஜி பிரியர்கள் பெரும் அதிர்ச்சியில் இருந்து வருகின்றனர். இருப்பினும் பதிவிறக்கம் செய்தவர்கள் தொடர்ந்து விளையாடலாம் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளது.

Tags :
|
|