Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • நிவர் புயல் காரணமாக அரசு மற்றும் ஆம்னி பேருந்து சேவைகள் நிறுத்தம்

நிவர் புயல் காரணமாக அரசு மற்றும் ஆம்னி பேருந்து சேவைகள் நிறுத்தம்

By: Monisha Tue, 24 Nov 2020 3:06:54 PM

நிவர் புயல் காரணமாக அரசு மற்றும் ஆம்னி பேருந்து சேவைகள் நிறுத்தம்

வங்கக்கடலில் உருவாகியுள்ள நிவர் புயல் காரணமாக சென்னை உள்ளிட்ட பல மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. நிவர் புயல் நாளை காரைக்கால்–மகாபலிபுரம் இடையே கரையை கடக்க உள்ளது.

இதனால் புதுக்கோட்டை, திருவாரூர், நாகப்பட்டினம், கடலூர், தஞ்சாவூர், விழுப்புரம் மற்றும் செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களுக்கு இடையேயும் மாவட்டங்களுக்கு உள்ளும் இன்று மதியம் ஒரு மணி முதல் பேருந்து போக்குவரத்து மறு உத்தரவு வரும் வரை நிறுத்தி வைக்கப்படுகிறது என முதலமைச்சர் தெரிவித்திருந்தார்.

bay of bengal,storm,precaution,bus,stop ,வங்கக்கடல்,புயல்,முன்னெச்சரிக்கை,பேருந்து,நிறுத்தம்

மேலும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக விழுப்புரம் வழியாக செல்லும் மதுரை, திருச்சி, தூத்துக்குடி, நெல்லை மற்றும் கன்யாகுமரி மாவட்டங்களுக்கு அரசு பேருந்துகள் இயக்கப்படாது என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் நிவர் புயல் முன்னெச்சரிக்கை எதிரொலியாக 6 மாவட்டங்களுக்கு ஆம்னி பேருந்து சேவை ரத்து செய்யப்பட்டுள்ளது. இதன்படி புதுக்கோட்டை, தஞ்சை, நாகை, திருவாரூர், விழுப்புரம், கடலூர், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களுக்கு ஆம்னி பஸ் சேவை நடைபெறாது என ஆம்னி பேருந்துகள் உரிமையாளர் மற்றும் சங்கத் தலைவர் அன்பழகன் தெரிவித்துள்ளார்.

Tags :
|
|