Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • ஆந்திராவில் ஆன்லைன் சூதாட்ட ரம்மி விளையாட்டுகளுக்கு அரசு தடை விதிப்பு

ஆந்திராவில் ஆன்லைன் சூதாட்ட ரம்மி விளையாட்டுகளுக்கு அரசு தடை விதிப்பு

By: Karunakaran Fri, 04 Sept 2020 7:19:21 PM

ஆந்திராவில் ஆன்லைன் சூதாட்ட ரம்மி விளையாட்டுகளுக்கு அரசு தடை விதிப்பு

ரம்மி, போக்கர் போன்ற சூதாட்ட விளையாட்டுகள் ஆன்லைனில் விளையாடப்படுகின்றன. இவற்றினால், இளைஞர்கள் தவறான பாதைக்கு செல்வதாக புகார்கள் எழுந்து வருகிறது. தற்போது ஆந்திராவில் இந்த ஆன்லைன் சூதாட்ட விளையாட்டுகளுக்கு அம்மாநில அரசு அதிரடி தடை விதித்து உள்ளது.

முதல்-மந்திரி ஜெகன்மோகன் ரெட்டி தலைமையில் நேற்று மாநில மந்திரிசபை கூட்டம் நடைபெற்றது. மாநில மந்திரிசபை கூட்டத்தில் ஆன்லைன் சூதாட்ட விளையாட்டுகளுக்கு தடை விதிக்கும் முடிவு எடுக்கப்பட்டது. இதுகுறித்து அம்மாநில தகவல் தொழில்நுட்பத்துறை மந்திரி வெங்கடராமையா தகவல் வெளியிட்டுள்ளார்.

government,ban,online casino rummy games,andhra pradesh ,அரசு, தடை, ஆன்லைன் கேசினோ ரம்மி விளையாட்டுகள், ஆந்திரா

இதுகுறித்து மந்திரி வெங்கடராமையா கூறுகையில், ஆன்லைன் சூதாட்ட விளையாட்டுகள இளைஞர்களை தவறாக வழிநடத்துவதுடன், அவர்களது வாழ்க்கையை பாழ்படுத்தி விடுகிறது. எனவே இளைஞர்களன் நலனை பாதுகாக்கும் நடவடிக்கையாக இந்த ஆன்லைன் சூதாட்ட விளையாட்டுகளை தடை செய்ய முடிவு செய்துளளோம் என்று கூறினார்.

மேலும் அவர், இதை மீறும் ஆன்லைன் சூதாட்ட அமைப்பாளர்களுக்கு முதல் தடவை ஒரு ஆண்டு சிறை தண்டனை, அபராதம் விதிக்கப்படும். இரண்டாவது முறை சிக்கினால் 2 ஆண்டு சிறை மற்றும் அபராதம் விதிக்கப்படும். இதேபோல ஆன்லைன் சூதாட்டம் விளையாடுபவர்களுக்கு 6 மாதம் வரை சிறை தண்டனை கிடைக்கும் என்று தெரிவித்தார்.

Tags :
|