Advertisement

அரசு அலுவலகங்கள் இனி 5 நாட்கள் மட்டுமே இயங்கும்

By: Nagaraj Sun, 25 Oct 2020 12:53:05 PM

அரசு அலுவலகங்கள் இனி 5 நாட்கள் மட்டுமே இயங்கும்

இனி 5 நாட்கள் மட்டுமே... தமிழக அரசு அலுவலகங்கள் இனி வாரத்தில் 5 நாட்கள் மட்டுமே இயங்கும் என தமிழக அரசு புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

தமிழக அரசின் பல துறை சார்ந்த அலுவலகங்கள் வாரத்தில் 6 நாட்கள் இயங்கி வரும் நிலையில் ஞாயிற்றுக்கிழமை மட்டும் விடுப்பு வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் கொரோனா காரணமாக அரசு அலுவலகங்கள் சில காலமாக மூடப்பட்டிருந்த நிலையில் தற்போது குறைந்த பணியாளர்களோடு செயல்பட்டு வருகிறது.

government office,week,5 days,notice,weekend off ,அரசு அலுவலகம், வாரம், 5 நாட்கள், அறிவிப்பு, வார விடுமுறை

இந்நிலையில் தமிழக அரசு புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதன்படி 2021ம் ஆண்டு ஜனவரி முதல் அனைத்து அரசு அலுவலகங்களும் 100 சதவீதம் ஊழியகளோடு செயல்படும். மேலும் வார விடுமுறை நாட்கள் 2 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது.

அடுத்த ஆண்டிலிருந்து அரசு அலுவலகங்கள் வாரத்தில் 5 நாட்கள் மட்டுமே செயல்படும் என அறிவிப்பு வெளியாகியுள்ளது.

Tags :
|
|
|