Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • கங்கையாற்றில் பெரு வெள்ளப் பெருக்கு; பீகார் மக்களுக்கு எச்சரிக்கை

கங்கையாற்றில் பெரு வெள்ளப் பெருக்கு; பீகார் மக்களுக்கு எச்சரிக்கை

By: Nagaraj Wed, 19 Aug 2020 3:30:06 PM

கங்கையாற்றில் பெரு வெள்ளப் பெருக்கு; பீகார் மக்களுக்கு எச்சரிக்கை

வெள்ள அபாய எச்சரிக்கை... கங்கை நதியில் பெருவெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளதையடுத்து பீகாரில் வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

சோனே நதியில் கங்கையில் இருந்து சுமார் 60 ஆயிரம் கனஅடி நீர் பாய்ந்துக் கொண்டிருக்கிறது. இதே போன்று பீகாரின் இதர நதிகளான கன்டக், புர்ஹி, பாகமதி, கோசி, மகாநந்தா உள்ளிட்ட ஆறுகளிலும் வெள்ளப் பெருக்கு அதிகரித்துள்ளது.

patna,floods,rising,nepal,heavy rains ,பாட்னா, வெள்ளம், அதிகரிக்கும், நேபாளம், கனமழை

கங்கையாற்றின் பல்வேறு படித்துறைகளில் நீராட வேண்டாம் என்று பொதுமக்களிடம் பாட்னாவில் அதிகாரிகள் எச்சரித்துள்ளனர். பீகாரின் தலைநகரில் நேற்று மாலை காந்தி காட் பகுதியில் வெள்ளப்பெருக்கு அபாயகரமான அளவைத் தாண்டிவிட்டது.

வரும் நாட்களில் இந்த வெள்ளம் மேலும் அதிகரிக்கும் என்றும் அதிகாரிகள் எச்சரித்துள்ளனர். பக்கத்த நாடான நேபாளத்தில் பெய்து வரும் கனமழையால் பெரும் அளவுக்கு நீர் திறந்து விடப்பட்டு அதன் வெள்ளம் பீகாரை மிதக்க வைத்துக் கொண்டிருக்கிறது. இதுவரை மழை வெள்ளத்தால் 25 பேர் உயிரிழந்துவிட்டனர். சுமார் 81 லட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

Tags :
|
|
|
|