Advertisement

செங்கல் சூளைகளில் ஜி.எஸ்.டி., அதிகாரிகள் சோதனை

By: Nagaraj Fri, 18 Sept 2020 09:53:57 AM

செங்கல் சூளைகளில் ஜி.எஸ்.டி., அதிகாரிகள் சோதனை

செங்கல் சூளைகளில் அதிகாரிகள் சோதனை... போலி கணக்கு காட்டி பல கோடி ரூபாய் மோசடி செய்தது தொடர்பாக, கோவை செங்கல் சூளைகளில் ஜி.எஸ்.டி., அதிகாரிகள் சோதனை நடத்தினர்.

கோவை அருகே தடாகம் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில், 200க்கும் மேற்பட்ட செங்கல் சூளைகள் இயங்கி வருகின்றன. இச்சூளைகளில் தயாரிக்கப்பட்ட செங்கலின் விலை உயர்த்தப்பட்டது. ஆனால், செங்கல் விற்பனையாகவில்லை என போலியான கணக்குகளை ஜி.எஸ்.டி., அலுவலகத்தில் செங்கல் சூளை உரிமையாளர்கள் சிலர் தாக்கல் செய்துள்ளனர்.

புகாரின் அடிப்படையில், ஜி.எஸ்.டி., அதிகாரிகள் நேற்று சோதனையில் ஈடுபட்டனர். இது தொடர்பாக கோவை ஜி.எஸ்.டி., இணை இயக்குனர் வம்சதாரா வெளியிட்டுள்ள அறிக்கை:

brick kiln,tax evasion,report,officers inspection ,செங்கல் சூளை, வரி ஏய்ப்பு, அறிக்கை, அதிகாரிகள் சோதனை

கட்டட செங்கற்களுக்கு, ஐந்து சதவீத ஜி.எஸ்.டி., வரி வசூல் மேற்கொள்ளப்படுகிறது. கோவை மற்றும் அதைச் சுற்றியுள்ள ஏராளமான செங்கல் சூளைகள் சி.ஜி.எஸ்.டி., சட்டம், 2017 பிரிவு, 22ல் பரிந்துரைக்கப்பட்ட பதிவுகளை மேற்கொள்ளவில்லை.

இதையடுத்து, தடாகம் பகுதியில் உள்ள நான்கு செங்கல் தயாரிப்பு நிறுவனங்கள், அவற்றின் உரிமையாளர்களின் வீடுகள், அலுவலகங்களில், 60க்கும் மேற்பட்ட ஜி.எஸ்.டி., அதிகாரிகள் சோதனை நடத்தினர். போலீசார் உதவியுடன் இந்த சோதனை நடந்தது. பல்வேறு முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.

ஆய்வில் செங்கல் சூளை அதிபர்கள் பல கோடி ரூபாய் வரிஏய்ப்பு செய்துள்ளது தெரியவந்துள்ளது. இவ்வாறு அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

Tags :
|