Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • ஜி.எஸ்.டி. இழப்பீட்டை நிராகரிப்பது மக்களுக்கு இழைக்கப்படும் துரோகம் - சித்தராமையா

ஜி.எஸ்.டி. இழப்பீட்டை நிராகரிப்பது மக்களுக்கு இழைக்கப்படும் துரோகம் - சித்தராமையா

By: Karunakaran Tue, 08 Sept 2020 1:30:47 PM

ஜி.எஸ்.டி. இழப்பீட்டை நிராகரிப்பது மக்களுக்கு இழைக்கப்படும் துரோகம் - சித்தராமையா

கர்நாடக காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் சித்தராமையா தலைமையில் காணொலிக்காட்சி மூலம் நடைபெற்றது. இந்த கூட்டம் முடிந்த பிறகு சித்தராமையா பேட்டி அளிக்கையில், எங்கள் கட்சி எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் எனது தலைமையில் காணொலிக்காட்சி மூலம் நடைபெற்றது. கர்நாடக சட்டசபை வருகிற 21-ந் தேதி தொடங்குகிறது. இதில் எழுப்ப வேண்டிய பிரச்சினைகள் குறித்து விவாதிக்க எங்கள் கட்சி எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் வருகிற 16-ந் தேதி மீண்டும் பெங்களூருவில் நடக்கவுள்ளதாக தெரிவித்தார்.

மேலும் அவர், கொரோனா தடுப்பு உபகரணங்கள் கொள்முதலில் நடந்துள்ள முறைகேடு, போதைப்பொருள் நடமாட்டம், டி.ஜே.ஹள்ளியில் நடைபெற்ற கலவரம், சரக்கு-சேவை திட்டம் மற்றும் பல்வேறு சட்ட மசோதாக்கள் குறித்து விவாதிக்க திட்டமிட்டுள்ளதாகவும், போதைப்பொருள் நடமாட்டம் எல்லா ஆட்சி காலத்திலும் இருந்தது. எனது ஆட்சியில் இது இல்லை என்று கூறினால் அது தவறாகிவிடும் என்று தெரிவித்தார்.

gst,compensation,betrayal,chitramaiya ,ஜி.எஸ்.டி, இழப்பீடு, துரோகம், சித்ராமையா

ஆதாரங்கள் இருந்தால் யார் மீது வேண்டுமானாலும் போலீசார் நடவடிக்கை எடுக்கட்டும். நடிகை ராகிணி திவேதிக்கும், தங்கள் கட்சிக்கும் தொடர்பு கிடையாது என பா.ஜனதாவினர் கூறுகிறார்கள். ஆனால் தேர்தலில் அவர் பா.ஜனதாவுக்கு ஆதரவாக பிரசாரம் செய்துள்ளார். இந்த விவகாரம் குறித்து சட்டசபை கூட்டத்தில் விவாதிக்க உள்ளோம். சட்டத்தை மீறியவர்கள் யாராக இருந்தாலும் நடவடிக்கை எடுக்கட்டும். இந்த விஷயத்தில் நாங்கள் எந்த குறுக்கீடும் செய்ய மாட்டோம் என்று சித்தராமையா கூறினார்.

மேலும் அவர், அரசு கஜானாவில் பணம் இல்லை என்று ஆட்சியாளர்கள் கூறுகிறார்கள். உலக வங்கியிடம் மத்திய அரசு கடன் பெற்று, மாநிலங்களுக்கு ஜி.எஸ்.டி. இழப்பு, மானியம் உள்ளிட்டவற்றுக்கு நிதி வழங்க வேண்டும். மாநிலங்களுக்கு வழங்க வேண்டிய ஜி.எஸ்.டி. இழப்பீடு உள்ளிட்ட அனைத்தையும் நிராகரிப்பது, கூட்டாட்சி தத்துவத்திற்கு எதிரானது. இது மக்களுக்கு இழைக்கப்படும் துரோகம் என்று கூறினார்.

Tags :
|