Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • மருத்துவ சேர்க்கை 7.5 சதவீத இட ஒதுக்கீட்டுக்கான வழிகாட்டு நெறிமுறை

மருத்துவ சேர்க்கை 7.5 சதவீத இட ஒதுக்கீட்டுக்கான வழிகாட்டு நெறிமுறை

By: Nagaraj Thu, 05 Nov 2020 7:58:49 PM

மருத்துவ சேர்க்கை 7.5 சதவீத இட ஒதுக்கீட்டுக்கான வழிகாட்டு நெறிமுறை

வழிகாட்டு நெறிமுறைகள்... மருத்துவ சேர்க்கையில் 7.5 விழுக்காடு இட ஒதுக்கீட்டின் கீழ் சேர நீட் தேர்வில் வெற்றி பெற்ற அரசு பள்ளி மாணவர்களுக்கான வழிகாட்டு நெறிமுறைகளை தமிழக அரசு வெளியிட்டுள்ளது.

இது தொடர்பான அறிவிப்பில் 6-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை அரசு பள்ளியில் படித்து, நீட் நுழைவுத்தேர்வில் வெற்றி பெற்ற மாணவர்கள் வரும் 12-ம் தேதி மாலை 5 மணிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் என கூறப்பட்டுள்ளது.

அனைத்து மாவட்டங்களில் நீட் தேர்வில் தேர்ச்சி பெற்ற அரசு பள்ளி மாணவர்களுக்கு உரிய வழிகாட்டுதல் வழங்க முதன்மை கல்வி அலுவலர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. இதற்காக அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலகங்களிலும் ஒரு நீட் பயிற்சியாளர், தலைமை ஆசிரியர் அடங்கிய குழு அமைக்கப்பட்டுள்ளது.

students,teachers,government of tamil nadu,guideline ,மாணவர்கள், ஆசிரியர்கள், தமிழக அரசு, வழிகாட்டு நெறிமுறை

அரசு வழங்கியுள்ள படிப்பு சான்றிதழில் மாணவர் பெயர், தந்தை பெயர், எந்த வகுப்பில் இருந்து எந்த வகுப்பு வரை பள்ளியில் படித்தார் என அனைத்து விபரங்களும் பதிவு செய்து தலைமை ஆசிரியர் கையெப்பம் பெற அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மாணவர்கள் ஒன்றுக்கும் மேற்பட்ட பள்ளிகளில் படித்திருப்பின், முன்பு படித்த பள்ளிகளில் கையெப்பம் பெற்று வந்தால் மட்டுமே சான்று என மாணவர்களை அலைக்கழிக்க கூடாது என தலைமை ஆசிரியர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Tags :