Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • வழிபாட்டு தலங்களில் மேற்கொள்ள வேண்டிய வழிகாட்டு நெறிமுறைகள்

வழிபாட்டு தலங்களில் மேற்கொள்ள வேண்டிய வழிகாட்டு நெறிமுறைகள்

By: Nagaraj Mon, 31 Aug 2020 5:57:05 PM

வழிபாட்டு தலங்களில் மேற்கொள்ள வேண்டிய வழிகாட்டு நெறிமுறைகள்

வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு... தமிழகத்தில் வழிபாட்டுத் தலங்கள் நாளை முதல் திறக்கப்படும் நிலையில், கோயில் உள்ளிட்ட வழிபாட்டுத் தலங்களில் பின்பற்ற வேண்டிய வழிகாட்டு நெறிமுறைகளுக்கான அரசாணையை தமிழக அரசு வெளியிட்டுள்ளது.

அனைத்து வழிபாட்டுத் தலங்களுக்கும் தனித்தனியாக வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிடப்பட்டுள்ளன. அதில், வழிபாட்டுத் தலங்களில் குறைந்த எண்ணிக்கையிலான பக்தர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவர். கோயிலுக்கு வரும் பக்தர்கள் அனைவரும் முகக்கவசம் அணிந்திருக்க வேண்டும்.

வழிபாட்டுத் தலங்களை அடிக்கடி கிருமிநாசினி கொண்டு சுத்தப்படுத்த வேண்டும். கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளுக்குள் இருக்கும் வழிபாட்டுத் தலங்கள் திறக்கப்படக் கூடாது.
வழிபாட்டுத் தலங்களின் வாயில்களில் கிருமிநாசினி வைக்கப்பட்டிருக்க வேண்டியது அவசியம் உள்ளிட்ட நெறிமுறைகள் விதிக்கப்பட்டுள்ளன.

places of worship,condition,permission,guideline ,வழிபாட்டு தலங்கள், நிபந்தனை, அனுமதி, வழிகாட்டு நெறிமுறை

தமிழகத்தில் செப்டம்பர் 30-ம் தேதி வரை பொதுமுடக்கம் நீட்டிக்கப்பட்டுள்ள நிலையில், வழிபாட்டுத் தலங்கள் திறப்பு உள்ளிட்ட சில முக்கிய தளர்வுகளை தமிழக அரசு அறிவித்திருந்தது.

தமிழகத்தில் அனைத்து மத வழிபாட்டுத்தலங்களையும் திறக்க நிபந்தனைகளுடன் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இரவு 8 மணி வரை கோயில்களை திறந்து வைத்து பக்தர்களை அனுமதிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

Tags :