Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • அரசு பள்ளிகளில் அரையாண்டு தேர்வு ரத்து- அமைச்சர் செங்கோட்டையன்

அரசு பள்ளிகளில் அரையாண்டு தேர்வு ரத்து- அமைச்சர் செங்கோட்டையன்

By: Monisha Wed, 16 Dec 2020 11:10:39 AM

அரசு பள்ளிகளில் அரையாண்டு தேர்வு ரத்து- அமைச்சர் செங்கோட்டையன்

கொரோனா பாதிப்பு மற்றும் தொற்று பரவல் காரணமாக பள்ளிகள் கடந்த மார்ச் மாதம் மூடப்பட்டன. இதுவரையில் திறக்கப்படவில்லை. இதனால் 1-ம் வகுப்பு முதல் 10-ம் வகுப்பு வரை ஆண்டு இறுதி தேர்வுகள் ரத்து செய்யப்பட்டன.

தனியார் பள்ளிகளில் ஆன்லைன் வழியாக வகுப்பு நடத்தப்படுகின்றன. அரசு பள்ளிகளுக்கு கல்வி தொலைக்காட்சி வழியாக வீடியோ பாடங்கள் நடத்தப்படுகின்றன.

government school,television,half yearly exam,cancellation,online ,அரசுபள்ளி,தொலைக்காட்சி,அரையாண்டு தேர்வு,ரத்து,ஆன்லைன்

இந்நிலையில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் கூறியிருப்பதாவது:- அரசு பள்ளிகள், அரசு உதவிபெறும் பள்ளிகளில் இந்த கல்வியாண்டிற்கான அரையாண்டு தேர்வு ரத்து செய்யப்பட்டுள்ளது.

பாடத்திட்டங்கள் 9-ம் வகுப்பு வரை 50 சதவீதமும், 10, 11, 12ம் வகுப்புகளுக்கு 35 சதவீதமும் குறைக்கப்பட்டுள்ளன. தனியார் பள்ளிகள் அரையாண்டு தேர்வை ஆன்லைனில் நடத்திக் கொள்ளலாம் என அவர் தெரிவித்துள்ளார்.

Tags :