Advertisement

இந்தியாவிலும் புதிய கொரோனா வைரஸ் பரவி விட்டதா ?

By: Karunakaran Sun, 27 Dec 2020 3:34:11 PM

இந்தியாவிலும் புதிய கொரோனா வைரஸ் பரவி விட்டதா ?

உலகளவில் கொரோனா வைரசால் மோசமாக பாதிக்கப்பட்ட நாடுகளில் இரண்டாவது இடத்தில் இந்தியா உள்ளது. தற்போதுதான் இந்தியாவில் கொரோனா பரவலும், உயிரிழப்புகளும் கணிசமாக குறையத்தொடங்கி உள்ளது. இந்நிலையில், இங்கிலாந்தில் கண்டறியப்பட்டுள்ள புதிய வகை கொரோனா வைரஸ் இந்தியாவிலும் கால் பதித்துவிட்டதோ என்ற சந்தேகம் எழுந்துள்ளது. இந்த வைரஸ் 70 சதவீதம் அதிவேகமாக பரவுகிற தன்மையை கொண்டுள்ளதால் ‘சூப்பர் ஸ்பிரெடர்’ என அழைக்கப்படுகிறது.

இது கொத்து, கொத்தாக மக்களுக்கு பரவுகிற தன்மையை கொண்டிருக்கிறது. இங்கிலாந்து தலைநகர் லண்டனில் இருந்து உத்தரபிரதேச மாநிலம், மீரட் வந்துள்ள ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேரில் ஒரு தம்பதியர், அவர்களின் குழந்தை என 3 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதியாகி உள்ளது. மீரட் டி.பி. நகரில் தங்கியுள்ள அந்த தம்பதியரின் பெற்றோர், அண்ணிக்கும் கொரோனா வைரஸ் பாதிப்பு, உறுதி செய்யப்பட்டுள்ளது.

new corona virus,india,corona vaccine,uk ,புதிய கொரோனா வைரஸ், இந்தியா, கொரோனா தடுப்பூசி, இங்கிலாந்து

அவர்களின் அண்டை வீட்டைச் சேர்ந்த 9 நபர்களுக்கும் வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது அங்கு சுகாதார துறையினரிடையே பெரும் பீதியையும் ஏற்படுத்தி இருக்கிறது. இது புதிய கொரோனா வைரசா என்ற சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது.

இதுகுறித்து மீரட் தலைமை மருத்துவ அதிகாரி டாக்டர் அகிலேஷ் மோகன் கூறுகையில், டிசம்பர் 9-ந் தேதிக்கு பின்னர் 44 பேர் ஐரோப்பாவில் இருந்து இந்தியா வந்துள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. அவர்களில் 12 பேர் நாட்டின் பிற பகுதிகளுக்கு சென்று விட்டனர். தம்பதியரின் சோதனை மாதிரிகள், அவை புதிய கொரோனா வைரஸ் திரிபுதானா, இல்லையா என்பதை கண்டுபிடித்து உறுதி செய்வதற்காக டெல்லிக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன என்று கூறினார்.

Tags :
|