Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • வெங்காயம் குறித்து கனேடிய மக்களுக்கு சுகாதாரத்துறை எச்சரிக்கை

வெங்காயம் குறித்து கனேடிய மக்களுக்கு சுகாதாரத்துறை எச்சரிக்கை

By: Nagaraj Sun, 09 Aug 2020 1:15:39 PM

வெங்காயம் குறித்து கனேடிய மக்களுக்கு சுகாதாரத்துறை எச்சரிக்கை

கனேடியர்களுக்கு எச்சரிக்கை... அமெரிக்காவிலிருந்து மற்றும் எங்கிருந்து வந்தது என்று சரியாக தெரியாத வெங்காயத்தைப் பயன்படுத்தவேண்டாம் என கனேடியர்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

கனேடிய வெங்காயம் பாதுகாப்பானது என அறிவித்துள்ள சுகாதாரத்துறை அலுவலர்கள், அமெரிக்காவிலிருந்து வரும் வெங்காயத்தை பயன்படுத்த வேண்டாம் என எச்சரித்துள்ளனர். கடந்த வாரம் அமெரிக்காவிலிருந்து கொண்டு வரப்பட்ட வெங்காயத்தால் சால்மோனெல்லா என்னும் கிருமி பரவியது.

onions,canadians,warning,alberta,salmonella ,
வெங்காயம், கனேடியர்கள், எச்சரிக்கை, அல்பர்ட்டா, சால்மோனெல்லா

அந்த வெங்காயத்தை உண்ட ஆல்பர்ட்டா, மனித்தோபா, ஒன்ராறியோ மற்றும் பிரின்ஸ் எட்வர்ட் தீவைச் சேர்ந்த 114 பேர் நோய்த்தொற்றுக்கு ஆளானார்கள். தற்போது அந்த எண்ணிக்கை 239ஆக உயர்ந்துள்ளது.

அமெரிக்காவைப் பொருத்தவரை, இந்த பாதிக்கப்பட்ட வெங்காயத்தை உண்டதால் ஏற்பட்ட சால்மோனெல்லா தொற்றால் 640 பேர் பாதிக்கப்பட்டுள்ளார்கள். அங்கு, 43 மாகாணங்களில் உள்ளவர்கள் சால்மோனெல்லா நோய்க்கிருமியால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், 85 பேர் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளார்கள் என்று தகவல்கள் வெளியாகி உள்ளன.

Tags :
|