Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • இறுதிக்கட்டத்தை எட்டிய தீபாவளி விற்பனை; சென்னையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு

இறுதிக்கட்டத்தை எட்டிய தீபாவளி விற்பனை; சென்னையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு

By: Monisha Fri, 13 Nov 2020 08:40:09 AM

இறுதிக்கட்டத்தை எட்டிய தீபாவளி விற்பனை; சென்னையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு

நாடு முழுவதும் தீபாவளி பண்டிகை நாளை (சனிக்கிழமை) உற்சாகமாக கொண்டாடப்படுகிறது. தீபாவளி பண்டிகையை முன்னிட்டு ஜவுளி, வீட்டு உபயோக பொருட்கள், தங்க நகைகள் போன்ற பொருட்கள் விற்பனை இறுதிக்கட்டத்தை நெருங்கி உள்ளது. பொருட்களை வாங்குவதற்காக தியாகராயர்நகர், புரசைவாக்கம், பெரம்பூர், வண்ணாரப்பேட்டை உள்பட கடைவீதிகளில் மக்கள் கூட்டம் அலைமோதுகிறது.

மக்களிடமும், வியாபாரிகளிடமும் பணபுழக்கம் அதிகம் இருக்கும் என்பதால் வாடிக்கையாளர்கள் போர்வையில் சமூகவிரோதிகள் நடமாட்டத்தை கண்காணிக்க சென்னையில் போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு உள்ளது. சுமார் 12 ஆயிரம் போலீசார் சுழற்சி முறையில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

diwali,sales,chennai,police,security ,தீபாவளி,விற்பனை,சென்னை,போலீஸ்,பாதுகாப்பு

தீபாவளி பண்டிகை காலத்தின்போது சிறிய கடைகள், சாலையோர வியாபாரிகளிடம் ரவுடிகள் மாமூல் தொல்லை அதிகம் இருக்கும். இந்த ஆண்டு ரவுடிகள் மாமூல் வசூலிப்பதை தடுப்பதில் போலீஸ் கமிஷனர் மகேஷ்குமார் அகர்வால் அதிரடி நடவடிக்கையில் இறங்கினார்.

ஜாமீனில் வெளியே வந்து தலைமறைவாக இருந்த ரவுடிகள் கைது செய்யப்பட்டனர். இதுவரையில் 200 பேர் நீதிமன்றத்தில் சரணடைந்து உள்ளனர். கடந்த 3 நாட்களில் மட்டும் போலீசார் தேடுதல் வேட்டையில் 162 ரவுடிகள் சிக்கினர். இவர்களில் நேற்று மட்டும் 12 பேர் கைது செய்யப்பட்டனர்.

Tags :
|
|
|