Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • இன்னும் 3 நாட்களுக்கு கனமழை பெய்யும்; ரெட் அலார்ட் விடுக்கப்பட்டது

இன்னும் 3 நாட்களுக்கு கனமழை பெய்யும்; ரெட் அலார்ட் விடுக்கப்பட்டது

By: Nagaraj Tue, 25 Aug 2020 10:40:05 PM

இன்னும் 3 நாட்களுக்கு கனமழை பெய்யும்; ரெட் அலார்ட் விடுக்கப்பட்டது

இன்னும் 3 நாட்களுக்கு கனமழை... இந்தியாவின் கிழக்கு மற்றும் வடமேற்கு பகுதிகளில் ஆக.,28 வரை கனமழை பெய்யும். இதனால் ஒடிசா மற்றும் சத்தீஸ்கருக்கு ரெட் அலார்ட் விடுக்கப்பட்டதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இந்தியாவில் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்து வருவதால் நாட்டின் பல்வேறு மாநிலங்களிலும் கனமழை பெய்து வருகிறது. இதனால் நாட்டில் உள்ள முக்கிய நீர்த்தேக்கங்கள் மற்றும் நதிகளில் நீர்வரத்து அதிகரித்து வெள்ளப்பெருக்கு எற்படும் அபாயம் உள்ளது.

இதற்கிடையில், இந்தியாவின் கிழக்கு மற்றும் வடமேற்கு மாநிலங்களான ஒடிசா, மேற்கு வங்கம் மற்றும் ஜார்க்கண்ட் ஆகியவற்றில் ஆக.,28 வரை தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக இந்தியா வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

heavy rain,3 days,red alert,southwest,chance ,கனமழை, 3 நாட்கள், ரெட் அலார்ட், தென்மேற்கு, வாய்ப்பு

இது தொடர்பாக அம்மையம் கூறுகையில், ஆக., 28 வரை கிழக்கு மற்றும் வடமேற்கு இந்தியாவின் பல்வேறு இடங்களில் அதிக மழை பெய்யும். வடக்கு வங்காள விரிகுடா மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில், குறைந்த காற்றழுத்த தாழ்வுநிலை உருவாகியது. இது சூறாவளி காற்றாக மையம் கொண்டு, 5 நாட்களில் மேற்கு-வடமேற்கு நோக்கி நகர வாய்ப்புள்ளது.

இதனால் ஒடிசா, ஜார்க்கண்ட் மற்றும் மேற்கு வங்கத்தில் ஆக.,28 வரையும், சத்தீஸ்கர், மேற்கு ராஜஸ்தான், மத்திய பிரதேசம் ஆகியவற்றில் ஆக.,26 முதல் 28 வரையும், ஆக.,25 - 26 தேதிகளில் ஒடிசாவிலும், ஆக.,27 ல் சத்தீஸ்கரிலும் தனிமைப்படுத்தப் பட்ட இடங்களில் கனமழை பெய்யும். நாளை (ஆக.,26) ஒடிசாவிற்கும், நாளை மறுநாள் (ஆக.,27) சத்தீஸ்கருக்கும் சிவப்பு எச்சரிக்கை (Red Alert) விடுக்கப்பட்டுள்ளது. அடுத்த 2 முதல் 3 நாட்களில் பருவமழை தீவிரமடையலாம்.

கூடுதலாக, அரேபிய கடலில் இருந்து வடமேற்கு இந்தியா வழியாக ஆகஸ்ட் 28 வரை வலுவான கீழ் மட்ட தென்மேற்கு காற்று வீசுகிறது. ஆக.,28 வரை வடமேற்கு இந்தியாவில் கனமழை பெய்யும். ஆக.,26 ல் இமாச்சல பிரதேசத்திலும், ஆக.,26 முதல் 28 வரை உத்தரகண்ட் மீதும், ஆக.,27 மற்றும் 28 தேதியில் உத்தரபிரதேசத்திலும் அதிகமாக மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags :
|