Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • திருவண்ணாமலையில் இடி, மின்னலுடன் பலத்த மழை; மின்னல் தாக்கி 3 மாடுகள் பலி

திருவண்ணாமலையில் இடி, மின்னலுடன் பலத்த மழை; மின்னல் தாக்கி 3 மாடுகள் பலி

By: Monisha Mon, 19 Oct 2020 3:42:36 PM

திருவண்ணாமலையில் இடி, மின்னலுடன் பலத்த மழை; மின்னல் தாக்கி 3 மாடுகள் பலி

திருவண்ணாமலை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த சில தினங்களாக அவ்வப்போது மழை பெய்து வருகிறது. இந்த நிலையில் நேற்று முன்தினம் நள்ளிரவு திருவண்ணாமலையில் இடி, மின்னலுடன் கூடிய பலத்த மழை பெய்தது. தொடர்ந்து விடிய, விடிய மழை பெய்தது. இதனால் தாழ்வான பகுதிகளில் மழை நீர் தேங்கியது.

திருவண்ணாமலையில் உள்ள பெரிய ஏரிகளில் ஒன்றான வேங்கிக்கால் பெரிய ஏரி நிரம்பியது. அதேபோல் பல வருடங்களுக்கு பிறகு தேவனந்தல் ஏரியிலும் நீர்வரத்து ஏற்பட்டு உள்ளது. திருவண்ணாமலை மாவட்டத்தில் குடிநீர் மற்றும் விவசாய நீர் தேவைக்கு வடகிழக்கு பருவ மழையை மட்டுமே நம்பியிருக்க வேண்டிய நிலை உள்ளது. தென்மேற்கு பருவமழையால் நிலத்தடி நீர் மட்டம் கணிசமாக உயர்ந்து உள்ளது. ஆனால் நீர் நிலைகளில் சொல்லும் அளவிற்கு நீர் நிரம்பில்லை. தற்போது வடகிழக்கு பருவமழை பெய்ய தொடங்கி உள்ளது.

thiruvannamalai,thunder,lightning,rain,cows ,திருவண்ணாமலை,இடி,மின்னல்,மழை,மாடுகள்

திருவண்ணாமலை மாவட்டத்தில் அதிகபட்சமாக கீழ்பென்னாத்தூரில் 105.6 மில்லி மீட்டர் மழையளவு பதிவாகியுள்ளது. கீழ்பென்னாத்தூர் பகுதியில் நேற்று முன்தினம் இரவு 12 மணிக்கு மேல் இடி, மின்னலுடன் கூடிய மழை பெய்துள்ளது. கீழ்பென்னாத்தூரில் இந்த ஆண்டில் அதிகபட்சமாக ஒரே நாளில் இந்தளவிற்கு மழை பதிவாகி உள்ளது. பலத்த மழை காரணமாக ஏரி, குளங்களில் நீர்மட்டம் உயர்ந்துள்ளது. இதன் காரணமாக பொதுமக்களும், விவசாயிகளும் மகிழ்ச்சி அடைந்தனர்.

இனாம்காரியந்தல் ஏரி, கனபாபுரம் ஏரி ஆகியவை நிரம்பியது. இந்த மழையினால் தாழ்வான பகுதிகளில் வெள்ளநீர் புகுந்தது. மேலும், மின்னல் தாக்கியதில் 3 மாடுகள் இறந்தன. ஓட்டு வீடு ஒன்றும் இடிந்து விழுந்தது.

Tags :
|