Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • மழை காரணமாக அசாம் மாநிலத்தில் கடும் நிலச்சரிவு - 20 பேர் பலி

மழை காரணமாக அசாம் மாநிலத்தில் கடும் நிலச்சரிவு - 20 பேர் பலி

By: Monisha Tue, 02 June 2020 4:33:35 PM

மழை காரணமாக அசாம் மாநிலத்தில் கடும் நிலச்சரிவு - 20 பேர் பலி

அசாம் மாநிலத்தில் கடந்த சில தினங்களாக இடி மின்னலுடன் கூடிய பலத்த கனமழை பெய்து வருகிறது. இதனால் ஆறுகளில் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. தாழ்வான பகுதிகள் தண்ணீரில் மூழ்கி உள்ளன.

300க்கும் மேற்பட்ட கிராமங்கள் வெள்ளத்தில் மிதக்கும் நிலையில் உள்ளன. மழை தொடர்பான விபத்துகளில் சிக்கி 6 பேர் உயிரிழந்துள்ளனர்.

மழை வெள்ளத்தால் மொத்தம் 3.72 லட்சம் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். 27 ஆயிரம் ஹெக்டேர் பரப்பளவில் பயிரிடப்பட்டிருந்த பயிர்கள் நாசமடைந்துள்ளன. கோல்பாரா மாவட்டம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.

state of assam,heavy rains,floods,landslides,20 dead ,அசாம் மாநிலம்,கனமழை,கடும் வெள்ளப்பெருக்கு,நிலச்சரிவு,20 பேர் பலி

இந்நிலையில், மழை காரணமாக இன்று பல்வேறு இடங்களில் நிலச்சரிவு ஏற்பட்டு குடியிருப்புகளை மூழ்கடித்துள்ளது.

சச்சார் மாவட்டத்தில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி 7 பேரும், ஹைலகண்டியில் 7 பேரும், கரிம்கஞ்ச் மாவட்டத்தில் 6 பேரும் பலியாகி உள்ளனர். நிலச்சரிவு ஏற்பட்ட பகுதிகளில் மீட்பு பணிகள் முழுவீச்சில் நடைபெறுகின்றன. மேலும் மழையால் பாதிக்கப்பட்ட மக்களை பாதுகாப்பான பகுதிக்கு அப்புறப்படுத்தும் பணியில் மீட்பு குழுவினர் தீவிரமாக ஈடுப்பட்டு வருகின்றனர்.

Tags :
|