Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • நிவர் புயல் எதிரொலியால் 7 மாவட்டங்களில் அதிக கனமழை பெய்யும்

நிவர் புயல் எதிரொலியால் 7 மாவட்டங்களில் அதிக கனமழை பெய்யும்

By: Monisha Tue, 24 Nov 2020 07:11:39 AM

நிவர் புயல் எதிரொலியால் 7 மாவட்டங்களில் அதிக கனமழை பெய்யும்

வங்கக்கடலில் உருவான காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் நிவர் புயலாக மாறி நாளை கரையை கடக்கிறது. இந்நிலையில் நிவர் புயல் காரணமாக தமிழகத்தின் பல மாவட்டங்களில் மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

அதன்படி, நாகப்பட்டினம், தஞ்சை, திருவாரூர், புதுக்கோட்டை, கடலூர், அரியலூர், பெரம்பலூர் மாவட்டங்களில் இடியுடன் கூடிய அதிக கனமழை பெய்யும்.

மேலும், சென்னை, காஞ்சீபுரம், ராமநாதபுரம், சிவகங்கை, திருச்சி, கள்ளக்குறிச்சி, விழுப்புரம், வேலூர், திருவண்ணாமலை, ராணிப்பேட்டை, திருப்பத்தூர் மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் இடியுடன் கூடிய கன மழை முதல் மிக அதிக கனமழையும் பெய்யக்கூடும். ஏனைய மாவட்டங்களில் இடியுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யும்.

meteorological center,heavy rains,nivar storm,bay of bengal,depression zone ,வானிலை ஆய்வு மையம்,கனமழை,நிவர் புயல்,வங்கக்கடல்,காற்றழுத்தத் தாழ்வு மண்டலம்

இதேபோல், நாளை நாகப்பட்டினம், தஞ்சை, திருவாரூர், கடலூர், கள்ளக்குறிச்சி, விழுப்புரம், திருவண்ணாமலை, செங்கல்பட்டு, அரியலூர், பெரம்பலூர் ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் அதிக கனமழை பெய்யக்கூடும்.

திருச்சி, நாமக்கல், கரூர், ஈரோடு, தர்மபுரி, சேலம், கிருஷ்ணகிரி, சிவகங்கை, ராமநாதபுரம், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, வேலூர், காஞ்சீபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர், புதுக்கோட்டை, சென்னை ஆகிய மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் இடியுடன் கூடிய கன முதல் மிக கனமழையை எதிர்பார்க்கலாம். ஏனைய வடமாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Tags :