Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • உசிலம்பட்டி-ஆண்டிப்பட்டி இடையே அதிவேக ரயில் சோதனை ஓட்டம்

உசிலம்பட்டி-ஆண்டிப்பட்டி இடையே அதிவேக ரயில் சோதனை ஓட்டம்

By: Monisha Thu, 17 Dec 2020 10:45:31 AM

உசிலம்பட்டி-ஆண்டிப்பட்டி இடையே அதிவேக ரயில் சோதனை ஓட்டம்

நாடு முழுவதும் மீட்டர்கேஜ் ரயில் பாதைகள் அனைத்தும் அகல ரயில் பாதையாக மாற்றப்பட்டு வருகின்றன. அந்த வகையில் ஆங்கிலேயர் ஆட்சிகாலத்தின்போது தொடங்கப்பட்ட மதுரை-போடி மீட்டர்கேஜ் ரயில் பாதையை அகல ரயில் பாதையாக மாற்ற முடிவு செய்யப்பட்டது. இதைத்தொடர்ந்து கடந்த 2009-ம் ஆண்டு முதல் மதுரை-போடி இடையேயான மீட்டர்கேஜ் பாதையில் ரயில் சேவை நிறுத்தப்பட்டது. அதன்பிறகு அகல ரயில் பாதையாக மாற்றும் பணிகள் நடைபெற்று வந்தன. கிட்டத்தட்ட 10 ஆண்டுகளாக நடைபெற்று வந்த இந்த பணிகள் 90 சதவீதம் முடிவடைந்துள்ளது.

அதன்படி, முதற்கட்டமாக மதுரையிலிருந்து உசிலம்பட்டி வரையிலான 37 கி.மீ. தூரத்திற்கான அகல ரயில் பாதை பணிகள் நிறைவடைந்து, சோதனை ஓட்டம் நடத்தப்பட்டது. இதனையடுத்து உசிலம்பட்டியில் இருந்து தேனி வரையிலான பணிகள் துரிதமாக நடைபெற்றது. இந்தநிலையில் உசிலம்பட்டியிலிருந்து ஆண்டிப்பட்டி வரையிலான 21 கி.மீ. தூர அகல ரயில் பாதை பணிகளும் நிறைவடைந்தது.

meter gauge,train,track,test run,success ,மீட்டர்கேஜ்,ரயில்,பாதை,சோதனை ஓட்டம்,வெற்றி

இதைத்தொடர்ந்து உசிலம்பட்டி-ஆண்டிப்பட்டி இடையே அகல ரயில் பாதையில் அதிவேக ரயில் சோதனை ஓட்டம் நடத்த முடிவு செய்யப்பட்டது. அதன்படி நேற்று உசிலம்பட்டியில் இருந்து மாலை 4.40 மணிக்கு புறப்பட்ட அந்த ரயில் ஆண்டிப்பட்டி கணவாய் வரையிலான 11 கி.மீ. தூரத்திற்கு 120 கி.மீ. வேகத்திலும், கணவாய் மலைப்பகுதியில் 4 கி.மீ. தூரத்திற்கு 65 கி.மீ. வேகத்திலும் இயக்கப்பட்டது. 11 ஆண்டுகளுக்கு பின்னர் இயக்கப்பட்ட ரயிலை காண ஆண்டிப்பட்டி பகுதி மக்கள் ஆயிரக்கணக்கானோர் திரண்டிருந்தனர். சரியாக 5.00 மணிக்கு ஆண்டிப்பட்டிக்கு வந்த ரயிலை ரவீந்திரநாத் எம்.பி. மலர் தூவி வரவேற்றார்.

முன்னதாக அகல ரயில் பாதை பணிகளை ஆய்வு செய்வதற்காக ரயில்வே துறையின் முதன்மை பாதுகாப்பு கமி‌‌ஷனர் அபய்குமார்ராய், மதுரை கோட்ட மேலாளர் லெனின், தலைமை செயல் அலுவலர் ரவீந்திரன்பாபு, முதன்மை பொறியாளர் இளம்பூரான் உள்ளிட்ட உயர் அதிகாரிகள் ஆண்டிப்பட்டிக்கு வந்தனர். பின்னர் அவர்கள் டிராலி வண்டியில் தண்டவாளத்தில் சென்று ரயில் பாதை வழித்தடத்தை ஆய்வு செய்தனர். அதன்பின்னர் ஆண்டிப்பட்டி ரயில் நிலையத்தில் மேற்கொள்ளப்பட்ட பணிகளையும் அவர்கள் பார்வையிட்டனர்.

மேலும், வருகிற மே மாதத்திற்குள் தேனி வரை அனைத்து பணிகளும் முடிக்கப்பட்டு, அந்த மாதத்திலேயே மதுரையில் இருந்து தேனிக்கு ரயில் சேவை தொடங்கப்படும் என்றும் ஜூன் மாதம் தேனியில் இருந்து மதுரை வழியாக சென்னைக்கு நேரடியாக ரயில் சேவை தொடங்கப்படும் என்றும் ரயில்வே அதிகாரிகள் அறிவித்தனர்.

Tags :
|
|