Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • பழைய இரும்பு கடையில் பாட புத்தகங்கள் பதுக்கல்; கல்வித்துறை அதிகாரிகள் அதிர்ச்சி

பழைய இரும்பு கடையில் பாட புத்தகங்கள் பதுக்கல்; கல்வித்துறை அதிகாரிகள் அதிர்ச்சி

By: Monisha Tue, 29 Dec 2020 12:22:23 PM

பழைய இரும்பு கடையில் பாட புத்தகங்கள் பதுக்கல்; கல்வித்துறை அதிகாரிகள் அதிர்ச்சி

மயிலாடுதுறையில் உள்ள பழைய இரும்பு கடையில் 6 முதல் 12 ஆம் வகுப்பு வரையிலான பாட புத்தகங்கள் பதுக்கி வைக்கப்பட்டிருப்பதாக வருவாய்துறையினருக்கு ரகசியல் தகவல் வந்தது. இதையடுத்து, மயிலாடுதுறை வருவாய் கோட்டாட்சியர் தலைமையிலான வருவாய்த்துறை அதிகாரிகள் பழைய இரும்பு கடைக்கு சென்று சோதனை மேற்கொண்டனர்.

சோதனையில் 2019-20 ஆம் கல்வி ஆண்டுக்கான பாடப்புத்தகங்கள் 5000-க்கும் மேற்பட்டவை பண்டல் பண்டலாக இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. வருவாய்த்துறையினர் மயிலாடுதுறை போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். தொடர்ந்து கடை உரிமையாளரை போலீசார் கைது செய்து விசாரித்தனர்.

iron shop,books,hoarding,officers,shock ,இரும்பு கடை,புத்தகங்கள்,பதுக்கல்,அதிகாரிகள்,அதிர்ச்சி

கடை உரிமையாளர் அளித்த தகவலின் பேரில் மயிலாடுதுறை கிட்டப்பா மேல்நிலைப்பள்ளியில் உள்ள புத்தக கிடங்கில் பணியாற்றும் மேகநாதன் என்பவரிடத்தில் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

தமிழக அரசு மாணவர்களின் நலன் கருதி விலையில்லாமல் வழங்கும் பள்ளி புத்தகங்களை பழைய இரும்பு கடையில் பதுக்கி வைத்த சம்பவம் அதிகாரிகளை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. மேலும் இது குறித்து கல்வித்துறை அதிகாரிகளும் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Tags :
|