Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • புரெவி காரணமாக காரைக்காலில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறை

புரெவி காரணமாக காரைக்காலில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறை

By: Monisha Thu, 03 Dec 2020 10:07:37 AM

புரெவி காரணமாக காரைக்காலில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறை

வங்கக்கடலில் உருவாகியுள்ள புரெவி புயல் இலங்கையின் திருகோணமலை - பருத்தித்துறை இடையே முல்லைத்தீவு அருகே கரையை கடக்கத் தொடங்கியுள்ளது. இன்று இரவு புயல் மன்னார் வளைகுடா நோக்கி நகரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

எனவே தூத்துக்குடி, நெல்லை, கன்னியாகுமரி, தென்காசி, ராமநாதபுரம், சிவகங்கை, புதுக்கோட்டை, தஞ்சை, திருவாரூர், நாகை, காரைக்கால், மயிலாடுதுறை, கடலூர், புதுச்சேரி, விழுப்புரம் ஆகிய மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் புரெவி புயல் முன்னெச்சரிக்கையாக காரைக்காலில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

bay of bengal,burevi storm,karaikal,schools,holidays ,வங்கக்கடல்,புரெவி புயல்,காரைக்கால்,பள்ளிகள்,விடுமுறை

காரைக்காலில் 9 முதல் 12ம் வகுப்பு வரையிலான பள்ளிகள் செயல்பட்டு வருகின்றன. புரெவி புயல் காரணமாக காரைக்காலில் கனமழை பெய்து வருகிறது. இதனால் புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 9, 10, 11, 12ம் வகுப்புகளுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

காரைக்காலில் அரசு மற்றும் தனியார் பள்ளிகளுக்கு விடுமுறை அளித்து கலெக்டர் அர்ஜூன் தர்மா அறிவித்துள்ளார். புதுச்சேரி மாநில பகுதியான காரைக்கால் தமிழகத்தின் நாகை மாவட்டத்திற்கு அருகில் உள்ளது. காரைக்கால் பகுதியில் புரெவி புயல் காரணமாக நேற்று முதல் கனமழை பெய்து வருகிறது.

Tags :