Advertisement

திமுக தலைவரால் நீட் தேர்வை எப்படி ரத்து செய்ய இயலும்

By: Nagaraj Thu, 17 Sept 2020 7:38:00 PM

திமுக தலைவரால் நீட் தேர்வை எப்படி ரத்து செய்ய இயலும்

தி.மு.க தலைவரால் நீட் தேர்வினை எப்படி ரத்து செய்ய இயலும் என்று கேள்வியை எழுப்பியுள்ளார் தமிழக பாரதிய ஜனதா கட்சியின் தலைவர் எல்.முருகன்.

மத்திய அரசு கொண்டு வந்த மருத்துவ படிப்பிற்கான நுழைவு தேர்வு நீட். இந்த தேர்வு தமிழகத்தில் பெரும் எதிர்ப்பை சந்தித்துள்ள நிலையில், நீட் தேர்வின் மீதுள்ள பயத்தால் பல மாணவ - மாணவிகள் தங்களின் இன்னுயிரை நீத்துள்ளனர்.

இந்த வருடத்தில் எப்போதும் இல்லாத அளவிற்கு 4 தற்கொலைகள் அரங்கேறியுள்ளது.

bjp leader,neet election,alliance,congress,dmk ,பாஜ தலைவர், நீட் தேர்வு, கூட்டணி, காங்கிரஸ், திமுக

துவக்கத்தில் நீட் தேர்வினை கொண்டு வர காங்கிரஸ் கையெழுத்திட, இதனை திமுகவும் ஆதரித்து தமிழகத்திற்கு நீட் கொண்டு வந்தது. இப்போது அரசியல் நாடகத்திற்காக ஆளும் காட்சிகளை குறை கூறி வருகிறது.

இந்த நிலையில், தி.மு.க தலைவரால் நீட் தேர்வினை எப்படி ரத்து செய்ய இயலும் என்று கேள்வியை எழுப்பியுள்ளார் தமிழக பாரதிய ஜனதா கட்சியின் தலைவர் எல்.முருகன்.. அவர் தெரிவித்துள்ளதாவது:

"காங்கிரசுடன் திமுக கூட்டணியில் அங்கம் வகித்த சமயத்தில் நீட் தேர்வினை எதிர்த்து வார்த்தை கூட பேசவில்லை. அவர்கள் எப்படி நீட்டை ஒழிப்பார்கள் " என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

Tags :