Advertisement

சர்க்கரைவள்ளிக் கிழங்கு சாட் செய்வது எப்படி ?

By: Karunakaran Tue, 24 Nov 2020 12:48:59 PM

சர்க்கரைவள்ளிக் கிழங்கு சாட் செய்வது எப்படி ?

குளிர் காலத்திற்கு இதமான உணவு வகைகளை வீட்டில் தயார் செய்து ருசித்து, பருவகால நோய் பாதிப்பில் இருந்து விடுபடலாம். இன்று நாம் சுவையான சர்க்கரைவள்ளிக் கிழங்கு சாட் செய்வதை அறிந்து கொள்வோம்.

தேவையானவை:

சர்க்கரைவள்ளிக் கிழங்கு - அரை கிலோ
மிளகு தூள் - 1 டீஸ்பூன்
சீரகத்தூள் - 1 டீஸ்பூன்
சாட் மசாலாத்தூள் - சிறிதளவு
உப்பு - தேவைக்கு ஏற்ப

sugar beet sauce,potato,chaat,snacks ,சர்க்கரைவள்ளிக்கிழங்கு சாஸ், உருளைக்கிழங்கு, சாட், தின்பண்டங்கள்

செய்முறை:

முதலில் சர்க்கரை வள்ளிக்கிழங்கை வேகவைத்து, தோல் நீக்கி சிறிய துண்டுகளாக நறுக்கிக்கொள்ள வேண்டும். பின்னர் மிளகு தூள், சீரகத்தூள், உப்பு ஆகியவற்றை ஒன்றாக கலந்து வைக்க வேண்டும்.

பின் நறுக்கிய சர்க்கரை வள்ளிக்கிழங்கை ஒரு பாத்திரத்தில் போட்டு அதனுடன் கலந்து வைத்துள்ள மிளகு தூள், சீரகத்தூள், உப்பு கலவையை சர்க்கரை வள்ளிக்கிழங்குகள் மீது தூவி நன்றாக கலக்க வேண்டும். இறுதியில் அதன் மீது சாட் மசாலா தூள் தூவி பரிமாற சுவையான சர்க்கரைவள்ளிக் கிழங்கு சாட் தயார்.


Tags :
|
|