Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • ஹைட்ராக்ஸி குளோரோகுயின் மருந்தால் எந்தவொரு பக்க விளைவும் இல்லை; மருத்துவ கவுன்சில் விளக்கம்

ஹைட்ராக்ஸி குளோரோகுயின் மருந்தால் எந்தவொரு பக்க விளைவும் இல்லை; மருத்துவ கவுன்சில் விளக்கம்

By: Nagaraj Wed, 27 May 2020 11:54:25 AM

ஹைட்ராக்ஸி குளோரோகுயின் மருந்தால் எந்தவொரு பக்க விளைவும் இல்லை; மருத்துவ கவுன்சில் விளக்கம்

இந்தியாவில் நடத்தப்பட்ட ஆராய்ச்சியில் ஹைட்ராக்ஸி குளோரோகுயின் மருந்தால் எந்தவொரு பக்க விளைவும் கண்டறியப்படவில்லை என்று இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் விளக்கமளித்துள்ளது.

முன்னெச்சரிக்கையாக மலேரியா தடுப்பு மருந்தான ஹைட்ராக்ஸி குளோரோகுயின் மருந்தை கொரோனா தொற்றுக்கு கொடுப்பதையும், அது தொடர்பான மருத்துவ பரிசோதனைகளையும் தற்காலிகமாக நிறுத்தி வைப்பதாக உலக சுகாதார மையம் அறிவித்தது.

food,medical supervision,referral,medical council,interpretation ,உணவு, மருத்துவ மேற்பார்வை, பரிந்துரை, மருத்துவ கவுன்சில், விளக்கம்

இந்நிலையில் டில்லியில் செய்தியாளர்களிடம் பேசிய ஐ.சி.எம். ஆர். பொது இயக்குனர் பல்ராம் பார்கவா கூறியதாவது;

'இந்தியாவில் நடத்தப்பட்ட ஆராய்ச்சியில் ஹைட்ராக்ஸி குளோரோகுயின் மருந்தால் எந்தவொரு பக்க விளைவும் கண்டறியப்படவில்லை. ஹைட்ராக்ஸி குளோரோகுயின் மருந்தின் உயிரியல் நம்பகத்தன்மை, இன்-விட்ரோ தரவு மற்றும் பாதுகாப்பை எடுத்து கொண்டு, கடுமையான மருத்துவ மேற்பார்வையின் கீழ் இதை பரிந்துரைக்கிறோம்.

food,medical supervision,referral,medical council,interpretation ,உணவு, மருத்துவ மேற்பார்வை, பரிந்துரை, மருத்துவ கவுன்சில், விளக்கம்

பொது சுகாதார ஊழியர்கள் கொரோனாவுக்கு தடுப்பு சிகிச்சையாக இதை தொடர்ந்து பயன்படுத்த வேண்டும். ஆனால் உணவுடன் மட்டுமே இருக்க வேண்டும். ஹைட்ராக்ஸி குளோரோகுயின் மருந்தால் குமட்டல், வாந்தி மற்றும் படபடப்பு போன்ற பொதுவான பக்க விளைவுகள் இருக்கும்.

உணவுடன் மட்டுமே இதனை எடுத்து கொள்ள வேண்டுமென அறிவுறுத்தி உள்ளோம். வெறும் வயிற்றில் எடுத்து கொள்ள கூடாது. ஹைட்ராக்ஸி குளோரோகுயின் மருந்தை எடுத்து கொள்பவர்கள் பக்க விளைவுகளை தடுக்க, ஒருமுறை இ.சி.ஜி எடுக்க வேண்டும்'.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Tags :
|