Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • ஜனநாயக பண்பற்ற கட்சியாக மாறிவிட கூடாது என்பதால் போராட உள்ளேன்

ஜனநாயக பண்பற்ற கட்சியாக மாறிவிட கூடாது என்பதால் போராட உள்ளேன்

By: Nagaraj Thu, 01 Oct 2020 6:50:26 PM

ஜனநாயக பண்பற்ற கட்சியாக மாறிவிட கூடாது என்பதால் போராட உள்ளேன்

கட்சிக்குள் இருந்தே போராடுவேன்... தமிழ் தேசிய மக்கள் முன்னணி ஜனநாயக பண்பற்ற கட்சியாக மாறிவிட கூடாது என்பதற்காக தான் தொடர்ந்து கட்சிக்குள் இருந்து போராடவுள்ளதாக அக்கட்சியின் தேசிய அமைப்பாளரும் ஊடக பேச்சாளருமான சட்டத்தரணி வி.மணிவண்ணன் தெரிவித்தார்.

யாழில் உள்ள தனியார் விருந்தினர் விடுதியில் இன்று (வியாழக்கிழமை) நடைபெற்ற ஊடக சந்திப்பில் கருத்து தெரிவித்த அவர், கட்சிக்குள் நடக்கும் ஜனநாயக மீறலை பார்த்துக்கொண்டு இருப்பவன், தமிழர்களுக்கு எதிரான ஜனநாயக மீறலை எதிர்க்க தகுதியற்றவன் என்றும் கூறினார்.

நாம் எமது கொள்கை சார்ந்து பயணிக்கும் போது, ஒரு சிலரின் சுயநலம் மற்றும் சுயலாபத்திற்காக திசை திருப்ப முற்பட்டபோது அதனை கட்சிக்குள் இருந்து தான் கடுமையாக எதிர்த்தாகவும் அவர் சுட்டிக்காட்டினார். அவர்களின் சுயலாப நோக்கிற்கு தான் முட்டுக்கட்டையாக இருந்தமையினாலேயே தன்னை கட்சியை விட்டு நீக்க பல முயற்சிகளை மேற்கொள்ள தொடங்கினார்கள் என்றும் சட்டத்தரணி வி.மணிவண்ணன் குறிப்பிட்டுள்ளார்.

party general assembly,manivannan,within the party,will fight ,கட்சி பொதுச்சபை, மணிவண்ணன், கட்சிக்குள், போராடுவேன்

கட்சிக்கு என நிதிக்கட்டமைப்பை உருவாக்க முயற்சித்த போதும் அது ஒரு சிலருக்கு பிடிக்கவில்லை என்றும் நிதிக்கட்டமைப்பை உருவாக்க நினைத்த தன்னை கடுமையாக எதிர்த்தார்கள் என்றும் கூறினார். இன்று தன்னை கொள்கை இல்லாதவன் என கூறுபவர்கள் ஏன் முதலிலேயே கட்சியில் இருந்து துரத்தவில்லை என்றும் ஏன் தேர்தலில் போட்டியிட வேண்டும் என மன்றாடினார்கள் என்றும் கேள்வியெழுப்பினார்.

தமிழ் தேசிய கட்சிகளின் உடை சிங்கள தேசிய கட்சி வடக்கு கிழக்கில் எழுச்சி பெற்று வருகின்ற நிலையில் புதிய கட்சியோ, அமைப்போ உருவாக்குவது பெரிய விடயமே இல்லை என குறிப்பிட்ட சட்டத்தரணி வி.மணிவண்ணன் தான் உருவாக்கிய கட்சி கண் முன்னால் அழிவடைந்து செல்வத பார்த்துக்கொண்டு இருக்கப்போவதில்லை என்றும் கூறினார்.

கட்சிக்குள் ஜனநாயக பண்பற்ற செயற்பாடுகள் தொடர அனுமதித்தால் தமிழ் மக்களுக்கு எதிரான அநீதிக்கு எதிராக போராட தகுதியற்றவனாக இருப்பேன் என்றும் எனவே மிக விரைவில் கட்சியின் பொதுச்சபையை கூட்டி முடிவெடுப்போம் என்றும் வி.மணிவண்ணன் தெரிவித்தார்.

Tags :