Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • விவசாயத்தின் சவால்களை புரிந்துகொண்டு வளர்ந்திருக்கிறேன் - நரேந்திர சிங் தோமர் கடிதம்

விவசாயத்தின் சவால்களை புரிந்துகொண்டு வளர்ந்திருக்கிறேன் - நரேந்திர சிங் தோமர் கடிதம்

By: Karunakaran Fri, 18 Dec 2020 3:16:27 PM

விவசாயத்தின் சவால்களை புரிந்துகொண்டு வளர்ந்திருக்கிறேன் - நரேந்திர சிங் தோமர் கடிதம்

மத்திய அரசு கொண்டு வந்துள்ள 3 வேளாண் சட்டங்களுக்கு எதிராக டெல்லி மற்றும் டெல்லி எல்லைகளில் விவசாயிகள் நடத்தி வரும் போராட்டம் 23வது நாளாக நீடிக்கிறது. இந்நிலையில், மத்திய வேளாண் துறை மந்திரி நரேந்திர சிங் தோமர், விவசாயிகளுக்கு 8 பக்க கடிதம் ஒன்றை எழுதி உள்ளார்.
அதில், குறைந்தபட்ச விலை நிர்ணயத்தை மத்திய அரசு ஒருபோதும் கைவிடாது என்று தெரிவித்துள்ளார்.

மேலும் அதில், பிரதமரின் வாழ்க்கையில் மிக முக்கியமான கடமைகளில் ஒன்று விவசாயிகளின் நலன் காத்தல் என்றும் கூறி உள்ளார். கடிதத்தில் அவர், புதிய வேளாண் சட்டங்களால் குறைந்தபட்ச ஆதரவு விலை நிறுத்தப்படும் என்று வதந்திகள் பரப்பப்படுகின்றன. இந்த வதந்திகளை நம்ப வேண்டாம். குறைந்தபட்ச ஆதரவு விலை தொடரும் என்று எழுத்துப்பூர்வமாக உறுதிமொழி அளிக்க மத்திய அரசு தயாராக உள்ளதாக தெரிவித்துள்ளார்.

delhi farmers protest,agriculture,narendra singh tomar,agricultural laws ,டெல்லி விவசாயிகள் எதிர்ப்பு, விவசாயம், நரேந்திர சிங் தோமர், விவசாய சட்டங்கள்

வேளாண் சீர்திருத்தங்களை பல விவசாய சங்கங்கள் வரவேற்று மகிழ்ச்சியாக உள்ளன. வேளாண் மந்திரி என்ற வகையில், விவசாயிகளின் தவறான எண்ணங்களை அகற்றுவதும், நாட்டின் ஒவ்வொரு விவசாயியையும் பதற்றமில்லாமல் செய்வதும் எனது கடமை ஆகும் என நரேந்திர சிங் தோமர் கூறியுள்ளார்.

மேலும் அவர், விவசாயிகளுக்கும் மத்திய அரசுக்கும் இடையில் ஒரு சுவரை உருவாக்க சதித்திட்டம் தீட்டப்படுவதை அம்பலப்படுத்துவது எனது கடமையாகும். நான் விவசாய குடும்பத்தைச் சேர்ந்தவன் என்பதால் விவசாயத்தின் சவால்களை புரிந்துகொண்டு வளர்ந்திருக்கிறேன் என கூறி உள்ளார்.

Tags :