Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • காங்கிரஸ் பொறுப்பில் இருந்து நீக்கப்பட்டுள்ள நான் பா.ஜ.க.வில் சேர மாட்டேன் - சச்சின் பைலட்

காங்கிரஸ் பொறுப்பில் இருந்து நீக்கப்பட்டுள்ள நான் பா.ஜ.க.வில் சேர மாட்டேன் - சச்சின் பைலட்

By: Karunakaran Wed, 15 July 2020 1:18:49 PM

காங்கிரஸ் பொறுப்பில் இருந்து நீக்கப்பட்டுள்ள நான் பா.ஜ.க.வில் சேர மாட்டேன் - சச்சின் பைலட்

ராஜஸ்தானில் முதல் மந்திரி அசோக் கெலாட்டிற்கும், துணை முதல்வர் சச்சின் பைலட்டிற்கும் இடையில் அதிகார மோதல் தற்போது பயங்கரமாக வெடித்தது. டெல்லி சென்று திரும்பிய சச்சின் பைலட் தனக்கு 20-க்கும் மேற்பட்ட எம்.எல்.ஏ.-க்கள் ஆதரவு இருப்பதாக கூறி இருந்தார். மேலும் காங்கிரஸ் சட்டமன்றக் குழு கூட்டத்தில் கலந்து கொள்ளாமல் இருந்தார்.

கொறாரா உத்தரவு பிறப்பித்தும் சச்சின் பைலட் மற்றும் அவரின் ஆதரவாளர்கள் கூட்டத்தில் கலந்து கொள்ளவில்லை. ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி, ப. சிதம்பரம் போன்ற தலைவர்கள் சச்சின் பைலட்டுடன் பேசி சமரச முயற்சி மேற்கொண்டபோதும் எந்த பலனும் கிடைக்கவில்லை.

sachin pilot,rajastan,congress,bjp ,சச்சின் பைலட், ராஜஸ்தான், காங்கிரஸ், பாஜக

இந்நிலையில் சச்சின் பைலட்க்கு ஆதரவான இரண்டு மந்திரிகள் ஆகியோர் மந்திரி சபையில் இருந்து நீக்கப்பட்டனர். ராஜஸ்தான் காங்கிரஸ் தலைவர் பதவியிலிருந்து சச்சின் பைலட் நீக்கப்பட்டு, கோவிந்த் சிங் நியமனம் செய்யப்பட்டார். தற்போது சச்சின் பைலட் மற்றும் அதிருப்தி எம்எல்ஏக்களை தகுதி நீக்கம் செய்யும் பணியில் காங்கிரஸ் தீவிரம் காட்டியுள்ளது.

சச்சின் பைலட் பாஜகவிற்கு வந்தால் வரவேற்பதாக அக்கட்சியின் முக்கிய தலைவர்கள் கூறியுள்ளனர். தற்போது இதற்கு சச்சின் பைலட், எந்த சூழ்நிலையிலும் பாஜகவில் சேர மாட்டேன். சிலர் டெல்லியில் தலைமை பதவிகளில் உள்ளவர்களின் மனதில் நஞ்சை கலக்கும் வகையில், நான் பாஜகவில் சேர இருப்பதாக கூறுகின்றனர் என்று தெரிவித்துள்ளார்.

Tags :