Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • விவசாயிகள் தொடர்பான கோரிக்கைகளை நிறைவேற்றாவிட்டால் உண்ணாவிரத போராட்டத்தை தொடங்குவேன் - அன்னா ஹசாரே

விவசாயிகள் தொடர்பான கோரிக்கைகளை நிறைவேற்றாவிட்டால் உண்ணாவிரத போராட்டத்தை தொடங்குவேன் - அன்னா ஹசாரே

By: Karunakaran Tue, 29 Dec 2020 1:00:06 PM

விவசாயிகள் தொடர்பான கோரிக்கைகளை நிறைவேற்றாவிட்டால் உண்ணாவிரத போராட்டத்தை தொடங்குவேன் - அன்னா ஹசாரே

விவசாயிகள் பிரச்சினைகளை தீர்ப்பதற்காக எம்.எஸ்.சுவாமிநாதன் கமிட்டியின் பரிந்துரையை அமல்படுத்த வேண்டும். விவசாய செலவு மற்றும் விலை கமிஷனுக்கு தன்னாட்சி அதிகாரம் வழங்க வேண்டும் என்று மத்திய அரசை சமூக ஆர்வலர் அன்னா ஹசாரே தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார். இதுதொடர்பாக கடந்த 14-ம் தேதியும் மத்திய வேளாண் மந்திரி நரேந்திர சிங் தோமருக்குக் கடிதம் எழுதினார்.

அந்த கடிதத்தில், தனது கோரிக்கைகள் நிறைவேற்றப் படாவிட்டால், உண்ணாவிரத போராட்டம் நடத்துவேன் என கூறியிருந்தார். மேலும், மத்திய அரசு கொண்டுவந்துள்ள வேளாண் சட்டங்களை எதிர்த்து விவசாயிகள் டெல்லி எல்லைகளில் கடந்த ஒரு மாதமாக போராடி வரும் விவசாயிகள் போராட்டத்துக்கும் அன்னா ஹசாரே ஆதரவு தெரிவித்துள்ளார்.

hunger strike,farmers,anna hazare,delhi ,உண்ணாவிரதம், விவசாயிகள், அண்ணா ஹசாரே, டெல்ஹி

இந்நிலையில், தனது சொந்த ஊரான மகாராஷ்டிரா மாநிலம் அகமது நகர் மாவட்டத்தில் உள்ள ராலேகான் சித்தி கிராமத்தில் நேற்று அன்னா ஹசாரே செய்தியாளர்களுக்குப் பேட்டி அளித்தபோது, விவசாயிகள் பிரச்சினைகளுக்காக கடந்த 3 ஆண்டுகளாக போராட்டம் நடத்தி வருகிறேன். ஆனால், மத்திய அரசு அவர்களின் பிரச்சினையை தீர்க்கவில்லை. வெற்று வாக்குறுதிகளை மட்டுமே மத்திய அரசு கொடுத்து வருகிறது. இதன் காரணமாக, மத்திய அரசின் மீதான எனது நம்பிக்கை போய்விட்டது என்று கூறினார்.

மேலும் அவர், என்னிடம் ஒரு மாத காலம் அவகாசம் கேட்டார்கள். எனவே, 2021-ம் ஆண்டு ஜனவரி வரை நான் அவகாசம் அளித்திருக்கிறேன். அதன்பின்பும் என்னுடைய கோரிக்கைகள் நிறைவேற்றப்படாவிட்டால், நான் விவசாயிகளுக்காக உண்ணாவிரதப் போராட்டத்தை தொடங்குவேன். அதுதான் என்னுடைய கடைசி போராட்டமாக இருக்கும் என்று தெரிவித்துள்ளார்.

Tags :