Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • சட்டப்பூர்வ வாக்குகளை எண்ணினால் எளிதாக வெற்றி பெற்றுவிடுவேன் - அதிபர் டிரம்ப்

சட்டப்பூர்வ வாக்குகளை எண்ணினால் எளிதாக வெற்றி பெற்றுவிடுவேன் - அதிபர் டிரம்ப்

By: Karunakaran Fri, 06 Nov 2020 09:11:53 AM

சட்டப்பூர்வ வாக்குகளை எண்ணினால் எளிதாக வெற்றி பெற்றுவிடுவேன் - அதிபர் டிரம்ப்

அமெரிக்‍க அதிபர் தேர்தலில் தேர்வுக் குழுவின் 270 வாக்குகளை பெற்றால் வெற்றி பெறலாம். இந்நிலையில், ஜனநாயக கட்சி வேட்பாளர் ஜோ பைடன் 264 வாக்குகளுடன் முன்னிலையில் உள்ளர். டிரம்ப் 214 வாக்குகளுடன் பின்தங்கியுள்ளார். ஜோ பைடன் வெற்றியை நெருங்கியிருக்கிறார். இருப்பினும், தபால் வாக்குகளை எண்ணும் பணியில் தொய்வு ஏற்பட்டுள்ளதால், இறுதி முடிவுகள் வெளியாவதில் இழுபறி நீடிக்கிறது.

இழுபறி நீடிக்கும் அரிசோனா, நெவடா மாநிலங்களில் பைடன் முன்னிலையில் இருக்கிறார். ஆனால், பென்சில்வேனியா, ஜார்ஜியா, வடக்கு கரோலினா ஆகிய மாநிலங்களில் டிரம்ப் முன்னிலையில் இருக்கிறார். இந்த மாநிலங்களின் முடிவைப் பொறுத்து தேர்தலின் இறுதி முடிவுகள் அமையும் என கூறப்படுகிறது. 20 தேர்வுக்குழு வாக்குகளை கொண்ட பென்சில்வேனியா மாநிலத்தில் வெற்றி பெறுவது மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாகவுள்ளது.

america,legal votes,president trump,presidential election ,அமெரிக்கா, சட்ட வாக்குகள், ஜனாதிபதி டிரம்ப், ஜனாதிபதித் தேர்தல்

இந்த தேர்தலில் தான் ஏற்கெனவே வெற்றி பெற்றதாக அறிவித்த டொனால்ட் ட்ரம்ப், வாக்கு எண்ணிக்கையில் முறைகேடு நடந்திருப்பதாக குற்றம் சாட்டியுள்ளார். 3 மாநிலங்களில் வாக்‍கு எண்ணிக்கைக்‍கு எதிராக நீதிமன்றத்தில் வழக்‍கு தொடுத்தார். இதில் மிச்சிகன், ஜார்ஜியா மாநிலங்கள் தொடர்பான வழக்குகளை நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. இருப்பினும், பென்சில்வேனியாவில் தபால் வாக்கு எண்ணிக்கையை கண்காணிக்க உத்தரவிட்டுள்ளது.

இந்நிலையில் அதிபர் டிரம்ப், சட்டவிரோத வாக்குகளை எண்ணினால், அவர்கள் மோசடியாக வெற்றி பெற முயற்சி செய்யலாம். நான் ஏற்கனவே பல முக்கியமான மாநிலங்களை தீர்க்கமாக வென்றுள்ளேன். எனவே, இந்த தேர்தலில் மிக எளிதாக வெற்றி பெறுவோம் என்று நினைக்கிறோம். எங்களிடம் ஏராளமான சான்றுகள் இருப்பதால், வழக்குகள் நிறைய இருக்கும். நீதிமன்றம் சென்றால் வெற்றியை யாராலும் திருட முடியாது. யார் எந்த மாநிலத்தை உரிமை கோரினாலும் இறுதியில் நீதிமன்றம் தான் தீர்ப்பு வழங்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.

Tags :