Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • நான் பதவிக்கு வந்தால் ‘எச்1பி’ விசா குறித்த இந்தியர்களின் கவலைகள் போக்கப்படும் - ஜோ பைடன்

நான் பதவிக்கு வந்தால் ‘எச்1பி’ விசா குறித்த இந்தியர்களின் கவலைகள் போக்கப்படும் - ஜோ பைடன்

By: Karunakaran Thu, 24 Sept 2020 4:42:45 PM

நான் பதவிக்கு வந்தால் ‘எச்1பி’ விசா குறித்த இந்தியர்களின் கவலைகள் போக்கப்படும் - ஜோ பைடன்

அமெரிக்காவில் நவம்பர் மாதம் 3-ஆம் தேதி ஜனாதிபதி தேர்தல் நடைபெறவுள்ளது. இந்த ஜனாதிபதி தேர்தலுக்காக குடியரசு கட்சி வேட்பாளரான தற்போதைய ஜனாதிபதி டிரம்பும், ஜனநாயக கட்சி வேட்பாளரான ஜோ பைடனும் சூறாவளி பிரசாரம் மேற்கொண்டு வருகின்றனர். அமெரிக்காவில் உள்ள இந்திய வம்சாவளியினரின் வாக்குகளை கவர இருவரும் தீவிரம் காட்டி வருகின்றனர்.

தற்போது இந்திய வம்சாவளியினர் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்ட இணையவழி நிதி திரட்டும் நிகழ்ச்சியில் ஜனநாயக கட்சி வேட்பாளர் ஜோ பைடன் கலந்து கொண்டு பேசியபோது, இந்திய வம்சாவளியினர் தங்களின் கடின உழைப்பாலும், தொழில் முயற்சிகளாலும் அமெரிக்காவின் பொருளாதார வளர்ச்சிக்கு பெரும் பங்கு அளித்துள்ளதாக ஜோ பைடன் புகழாரம் சூட்டினார்.

office,indians,h1b visas,joe biden ,அலுவலகம், இந்தியர்கள், எச் 1 பி விசாக்கள், ஜோ பிடன்

மேலும் தொடர்ந்து பேசிய ஜோ பைடன், இந்திய வம்சாவளியினரின் கலாசார, சமூக மற்றும் குடும்ப மதிப்புகள் மிகவும் பாராட்டுக்குரியவை. நடக்க இருக்கும் ஜனாதிபதி தேர்தலில் தான் வெற்றி பெற்று பதவிக்கு வந்தால் ‘எச்1பி’ விசா மட்டும் சட்டபூர்வ குடியேற்றம் குறித்த இந்தியர்களின் கவலைகள் போக்கப்படும் என உறுதியளித்தார்.

மேலும் அவர், இந்திய வம்சாவளியினரின் கலாசார, சமூக மற்றும் குடும்ப மதிப்புகள் மிகவும் பாராட்டுக்குரியவை என்பதாலேயே இந்திய அமெரிக்க புலம்பெயர்ந்தோரை தான் மிகவும் மதிக்கிறேன். மேலும் உலகின் மிகவும் செல்வாக்கான பன்னாட்டு நிறுவனங்களின் தலைமை பொறுப்புகளை இந்திய சமூகம் அலங்கரிப்பதாக கூறினார்.


Tags :
|