Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • புதுச்சேரியில் 2020-21-ம் ஆண்டுக்கான பட்ஜெட்டில் வெளியான முக்கிய அறிவிப்புகள்!

புதுச்சேரியில் 2020-21-ம் ஆண்டுக்கான பட்ஜெட்டில் வெளியான முக்கிய அறிவிப்புகள்!

By: Monisha Mon, 20 July 2020 6:20:39 PM

புதுச்சேரியில் 2020-21-ம் ஆண்டுக்கான பட்ஜெட்டில் வெளியான முக்கிய அறிவிப்புகள்!

புதுச்சேரியில் இன்று காலை 9.30 மணிக்கு சபாநாயகர் சிவக்கொழுந்து தலைமையில் சட்டசபை தொடங்கியது. சுமார் 15 நிமிடங்கள் கவர்னர் கிரண்பேடிக்காக காத்திருந்தனர். அதுவரை அவர் வராததால் சட்டசபை கூட்டத்தொடர் தொடங்கியது. சட்டசபையில் கவர்னர் நிகழ்ந்த வேண்டிய உரை நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாகவும், மதியம் 12.05 மணிக்கு முதலமைச்சர் நாராயணசாமி பட்ஜெட்டை தாக்கல் செய்வார் என்று கூறிய சிவக்கொழுந்து சட்டசபையை ஒத்திவைத்தார்.

இதையடுத்து கவர்னர் எதிர்ப்பை மீறி 2020-21-ம் ஆண்டுக்கான பட்ஜெட்டை முதல்வர் நாராயணசாமி தாக்கல் செய்தார். பட்ஜெட் உரையை எதிர்த்து அதிமுக, என்.ஆர்.காங்., பா.ஜ.க. உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர்.

பட்ஜெட்டை தாக்கல் செய்து பேசிய முதல்வர் நாராயணசாமி பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டார். அதில் கூறியதாவது:-

puducherry,budget,chief minister narayanasamy,free electricity,free water ,புதுச்சேரி,பட்ஜெட்,முதல்வர் நாராயணசாமி,இலவச மின்சாரம்,இலவச குடிநீர்

* புதுச்சேரியில் வறுமைக் கோட்டிற்கு கீழ் உள்ளவர்களுக்கு 100 யூனிட் இலவச மின்சாரம், இலவச குடிநீர்.

* கருணாநிதி பெயரில் புதுச்சேரியில் பள்ளி மாணவர்களுக்கு காலை சிற்றுண்டி திட்டம். நவம்பர் 15-ந்தேதி முதல் காலை உணவாக இட்லி, கிச்சடி,பொங்கல் வழங்கப்படும்.

* வறுமைக் கோட்டிற்கு கீழ் உள்ள மாணவர்கள் அனைவருக்கும் கல்லூரி கட்டணம் ரத்து. அனைத்து கல்லூரி கட்டணத்தையும் ரத்து செய்வதுடன் கல்லூரியில் சேர இலவசமாக விண்ணப்பம் வழங்கப்படும்.

* ஒரே நாடு ஒரே ரேசன் திட்டத்துக்காக ரேசன் கடைகள் புத்தாக்கம் செய்யப்படும். இவ்வாறு நாராயணசாமி அறிவிப்புகளை வெளியிட்டார்.

Tags :
|