Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • தமிழகத்தில் 3 மாவட்டங்களில் ஒரே நாளில் 24 பேர் கொரோனாவுக்கு பலி

தமிழகத்தில் 3 மாவட்டங்களில் ஒரே நாளில் 24 பேர் கொரோனாவுக்கு பலி

By: Monisha Fri, 28 Aug 2020 2:20:13 PM

தமிழகத்தில் 3 மாவட்டங்களில் ஒரே நாளில் 24 பேர் கொரோனாவுக்கு பலி

தமிழகத்தில் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருகிறது. பாதிப்பு மற்றும் பலி எண்ணிக்கையில் சென்னை மாவட்டம் முதலிடத்தில் உள்ளது. சென்னையை தொடர்ந்து திருவள்ளூர், காஞ்சீபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் கொரோனா தொற்று அதிக அளவில் பரவி உள்ளது. நோய் தடுப்பு பணிகள் தீவிரப்படுத்தப்பட்டு வருகிறது.

திருவள்ளூர் மாவட்டத்தில் நேற்று மட்டும் புதிதாக 323 பேருக்கு நோய் பாதிப்பு உறுதி செய்யப்பட்டது. இதனால் நோய் பாதித்தவர்களின் எண்ணிக்கை 23,627 ஆக உயர்ந்துள்ளது. நேற்று மட்டும் திருவள்ளூர் மாவட்டத்தில் 13 பேர் கொரோனா தொற்றுக்கு உயிரிழந்துள்ளனர். இது வரை மாவட்டத்தில் நோய் தொற்றால் 398 பேர் பலியாகி இருக்கிறார்கள்.

கொரோனா தொற்று அதிகரித்து வரும் நிலையில் உயரிழப்பும் உயர்ந்து வருவது மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

corona virus,infection,death,treatment,tiruvallur ,கொரோனா வைரஸ்,பாதிப்பு,பலி,சிகிச்சை,திருவள்ளூர்

திருவள்ளூர் மாவட்டத்தில் அதிகபட்சமாக ஆவடி மாநகராட்சி, பூந்தமல்லி, திருவேற்காடு, பொன்னேரி, மீஞ்சூர், பெரியபாளையம் உள்ளிட்ட பகுதிகளில் நோய் பரவல் தொடர்ந்து அதிகரித்தபடி உள்ளது. அங்கு மருத்துவ முகாம்கள், பரிசோதனைகள் தீவிரப்படுத்தப்பட்டு உள்ளன.

அதேபோல் செங்கல்பட்டு மாவட்டத்தில் நேற்று புதிதாக 298 பேருக்கு நோய் பாதிப்பு உறுதி செய்யப்பட்டு 24,749 ஆக உயர்ந்துள்ளது. நேற்று மட்டும் 8 பேர் நோய் தொற்றால் இறந்துள்ளனர்.

காஞ்சீபுரம் மாவட்டத்தில் நேற்று புதிதாக 256 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. பாதிப்பு எண்ணிக்கை 16,530 ஆக உயர்ந்துள்ளது. நேற்று நோய் தொற்றால் 3 பேர் பலியாகி இருக்கிறார்கள்

Tags :
|