Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • ஜார்கண்டில் கர்ப்பிணி மனைவியை 1,200 கி.மீ. தூரம் மொபட்டில் அழைத்துச்சென்று தேர்வு எழுத வைத்த கணவர்

ஜார்கண்டில் கர்ப்பிணி மனைவியை 1,200 கி.மீ. தூரம் மொபட்டில் அழைத்துச்சென்று தேர்வு எழுத வைத்த கணவர்

By: Karunakaran Sat, 05 Sept 2020 2:06:30 PM

ஜார்கண்டில் கர்ப்பிணி மனைவியை 1,200 கி.மீ. தூரம் மொபட்டில் அழைத்துச்சென்று தேர்வு எழுத வைத்த கணவர்

ஜார்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்த தனஞ்ஜெய் குமார் என்பவரது மனைவி ஹெம்ப்ராம். இவர்கள் பழங்குடியினத்தைச் சேர்ந்தவர்கள். ஹெம்ப்ராம் தற்போது கர்ப்பமாக உள்ளார். ஹெம்ப்ராம் ஆசிரியர் பட்டயத் தேர்வுக்கு விண்ணப்பித்திருந்தார். அவருக்கு மத்தியபிரதேச மாநிலம் குவாலியரில் தேர்வு மையம் ஒதுக்கப்பட்டிருந்தது. இது அவர்களின் கன்டா டோலா கிராமத்தில் இருந்து தேர்வு மையம் 1,200 கிலோமீட்டர் தூரத்திற்கும் அதிகமாகும்.

ஹெம்ப்ராமுக்கு பள்ளி ஆசிரியை ஆக வேண்டும் என்பது லட்சியம். இதனால் மனைவியை எப்படியாவது தேர்வு எழுதவைத்து ஆசிரியையாக்கிப் பார்க்க வேண்டும் என 8-ம் வகுப்பு வரை படித்துள்ள தனஞ்ஜெய் ஆசைப்பட்டார். தற்போது, கொரோனா பொது முடக்கத்தால் போக்குவரத்து தடைபட்டிருப்பது தேர்வுக்குச் சென்று திரும்புவதை சிரமத்திற்குரிய ஒன்றாக மாறியிருந்தது.

jharkhand,pregnant woman,husband,teachers exam ,ஜார்க்கண்ட், கர்ப்பிணி பெண், கணவர், ஆசிரியர்கள் தேர்வு

தேர்வு மையத்திற்கு செல்லும் வழியில் 4 மாநில எல்லைப் பகுதிகளை கடக்க வேண்டும். ரெயில், பஸ்கள் இயக்கப்படாததால் வாடகை காரில் செல்ல முயற்சி செய்தபோது அதற்கு 30 ஆயிரம் வரை செலவாகும் என்று அறிந்து கலக்கமடைந்தார். பின்னர் தன் மனைவியின் லட்சியத்தை நிறைவேற்ற தேர்வு மையத்திற்கு 1,200 கிலோ மீட்டருக்கும் அதிகமான தூரத்திற்கு ஸ்கூட்டரில் அழைத்துச் சென்று தேர்வு எழுத வைத்தார்.

இதுகுறித்து அவர் கூறுகையில், எங்களிடம் இருந்த சிறிய நகையை அடகு வைத்து ரூ.10 ஆயிரம் திரட்டிக் கொண்டு, தேர்வுக்கு புறப்பட்டோம். ரூ.5 ஆயிரத்திற்குள் அறை வாடகை, உள்ளிட்ட ஒரு வழி பயண செலவை முடித்துக்கொண்டோம். வரும் 11-ந்தேதி வரை தேர்வு எழுத வேண்டி உள்ளது. நிச்சயம் அவர் ஆசிரியையாக தேர்ச்சி பெறுவார் என்று கூறினார். இதை அறிந்த மாவட்ட நிர்வாகம் அவர்களுக்கு உதவி செய்ய ரூ.5 ஆயிரம் உதவித்தொகையை வழங்கியது.

Tags :