Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • மதுரை மாவட்டத்தில் அதிகரிக்கும் கொரோனா...பாதிப்பு எண்ணிக்கை 8,459 ஆக உயர்வு

மதுரை மாவட்டத்தில் அதிகரிக்கும் கொரோனா...பாதிப்பு எண்ணிக்கை 8,459 ஆக உயர்வு

By: Monisha Tue, 21 July 2020 2:55:11 PM

மதுரை மாவட்டத்தில் அதிகரிக்கும் கொரோனா...பாதிப்பு எண்ணிக்கை 8,459 ஆக உயர்வு

மதுரை மாவட்டத்தில் ஏற்கனவே 8,357 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்ட நிலையில் இன்று ஒரே நாளில் 102 பேருக்கு கொரோனா உறுதியாகி உள்ளது.

தமிழகத்தில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் கொரோனாவால் பாதிப்பு எண்ணிக்கை உயர்ந்து கொண்டே செல்கிறது. தமிழகத்தில் இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 1 லட்சத்து 75 ஆயிரத்து 678 ஆக அதிகரித்துள்ளது. தமிழகத்தில் கொரோனாவில் இருந்து மீண்டவர்களின் மொத்த எண்ணிக்கை 1 லட்சத்து 21 ஆயிரத்து 776 ஆக அதிகரித்துள்ளது. மாநிலத்தில் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 2 ஆயிரத்து 551 ஆக அதிகரித்துள்ளது.

மற்ற மாவட்டங்களை விட சென்னையில் தான் கொரோனாவால் பாதிக்கப்படுவர்களின் எண்ணிக்கை உயர்ந்து கொண்டே செல்கிறது.

madurai district,corona virus,infection,treatment,deaths ,மதுரை மாவட்டம்,கொரோனா வைரஸ்,பாதிப்பு,சிகிச்சை,பலி

சென்னையை தொடர்ந்து தற்போது திருவள்ளூர், காஞ்சிபுரம், திருவண்ணாமலை, செங்கல்பட்டு மதுரை, தேனி மற்றும் தென் மாவட்டங்களில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை உயர்ந்து வருகிறது.

இந்நிலையில் மதுரை மாவட்டத்தில் ஏற்கனவே 8,357 பேருக்கு தொற்று கண்டறியப்பட்ட நிலையில் இன்று ஒரே நாளில் 102 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 8,459 ஆக உயர்ந்துள்ளது. இதுவரை 4,934 பேர் கொரோனாவில் இருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். 160 பேர் உயிரிழந்துள்ளனர்.

Tags :