Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • தமிழகத்தில் கொரோனாவுக்கு 46 ஆயிரத்து 495 பேர் சிகிச்சை; மாவட்ட வாரியாக தகவல்

தமிழகத்தில் கொரோனாவுக்கு 46 ஆயிரத்து 495 பேர் சிகிச்சை; மாவட்ட வாரியாக தகவல்

By: Monisha Tue, 22 Sept 2020 08:50:00 AM

தமிழகத்தில் கொரோனாவுக்கு 46 ஆயிரத்து 495 பேர் சிகிச்சை; மாவட்ட வாரியாக தகவல்

தமிழகத்தில் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இருப்பினும் குணமடைவோர் எண்ணிக்கை அதிகளவில் உள்ளது. மாநிலத்தில் நேற்று 5 ஆயிரத்து 344 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மாநிலத்தில் நோய் தொற்று பரவியவர்களின் மொத்த எண்ணிக்கை 5 லட்சத்து 47 ஆயிரத்து 337 ஆக அதிகரித்துள்ளது.

நோய் தொற்று உறுதி செய்யப்பட்டவர்களில் 46 ஆயிரத்து 495 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதில் சிலர் தங்கள் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை பெற்றும் வருகின்றனர். மேலும், கொரோனா பாதிப்பில் இருந்து நேற்று 5 ஆயிரத்து 492 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். இதனால் மாநிலத்தில் வைரஸ் பாதிப்பில் இருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 4 லட்சத்து 91 ஆயிரத்து 971 ஆக அதிகரித்துள்ளது.

ஆனாலும், வைரஸ் தாக்குதலுக்கு நேற்று 60 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் தமிழகத்தில் கொரோனாவுக்கு பலியானோர் எண்ணிக்கை 8 ஆயிரத்து 871 ஆக உயர்ந்துள்ளது.

tamil nadu,corona virus,infection,death,treatment ,தமிழ்நாடு,கொரோனா வைரஸ்,பாதிப்பு,பலி,சிகிச்சை

மாவட்ட வாரியாக கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருபவர்கள் விவரம்:-
அரியலூர் - 187
செங்கல்பட்டு - 2,424
சென்னை - 9,871
கோவை - 4,475
கடலூர் - 2,208
தர்மபுரி - 992
திண்டுக்கல் - 597
ஈரோடு - 1,144
கள்ளக்குறிச்சி - 869
காஞ்சிபுரம் - 1,061
கன்னியாகுமரி - 631
கரூர் - 472
கிருஷ்ணகிரி - 836
மதுரை - 792
நாகை - 944
நாமக்கல் - 934
நீலகிரி - 724
பெரம்பலூர் - 102
புதுக்கோட்டை - 817
ராமநாதபுரம் - 230
ராணிப்பேட்டை - 540
சேலம் - 2,260
சிவகங்கை - 279
தென்காசி - 640
தஞ்சாவூர் - 1,143
தேனி - 547
திருப்பத்தூர் - 638
திருவள்ளூர் - 1,720
திருவண்ணாமலை - 1,203
திருவாரூர் - 827
தூத்துக்குடி - 803
திருநெல்வேலி - 962
திருப்பூர் - 1,590
திருச்சி - 767
வேலூர் - 916
விழுப்புரம் - 984
விருதுநகர் - 316
விமானநிலைய கண்காணிப்பு - 48
ரெயில் நிலைய கண்காணிப்பு - 2

Tags :
|