Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • மார்ச் மாதத்திற்கு பிறகு நாளொன்றுக்கான கொரோனா பாதிப்பு அதிகரிப்பு

மார்ச் மாதத்திற்கு பிறகு நாளொன்றுக்கான கொரோனா பாதிப்பு அதிகரிப்பு

By: Nagaraj Tue, 29 Sept 2020 4:50:37 PM

மார்ச் மாதத்திற்கு பிறகு நாளொன்றுக்கான கொரோனா பாதிப்பு அதிகரிப்பு

கனடாவில் மார்ச் மாத ஆரம்பத்திற்கு பிறகு நாளொன்றுக்கான கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகரித்துள்ளது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில் மட்டும், கனடாவில் வைரஸ் தொற்றினால் இரண்டாயிரத்து 176பேர் பாதிக்கப்பட்டதோடு, 10பேர் உயிரிழந்துள்ளனர். கனடாவில் கடந்த மார்ச் 3ஆம் திகதி இரண்டாயிரத்து 760பேர் பாதிக்கப்பட்டதே நாளொன்றுக்கான அதிகப்பட்ச பாதிப்பு எண்ணிக்கையாக உள்ளது.

தற்போது யாரும் எதிர்பாராத விதமாக தீடிரென இரண்டாயிரத்துக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவே கனடாவில் நாளொன்றுக்கான இரண்டாவது அதிகப்பட்ச பாதிப்பு எண்ணிக்கையாகும்.

canada,hospital,treatment,recovered ,கனடா, மருத்துவமனை, சிகிச்சை, குணமடைந்தனர்

கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்ட 26ஆவது நாடாக விளங்கும் கனடாவில், இதுவரை ஒரு இலட்சத்து 55ஆயிரத்து 301பேர் மொத்தமாக பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும், மொத்தமாக 9ஆயிரத்து 278பேர் உயிரிழந்துள்ளனர்.

மேலும், 13ஆயிரத்து 416பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். அத்துடன் இதுவரை ஒரு இலட்சத்து 32ஆயிரத்து 607பேர் பூரண குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதில் 110பேரின் நிலை மிகவும் கவலைக்கிடமாக இருப்பதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

Tags :
|