Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • 5 மாநிலங்களில் பண்டிகை காலங்களில் கொரோனா பாதிப்புகள் அதிகரிப்பு

5 மாநிலங்களில் பண்டிகை காலங்களில் கொரோனா பாதிப்புகள் அதிகரிப்பு

By: Monisha Wed, 28 Oct 2020 08:22:41 AM

5 மாநிலங்களில் பண்டிகை காலங்களில் கொரோனா பாதிப்புகள் அதிகரிப்பு

பண்டிகை காலங்களில் இந்தியாவில் கொரோனா பாதிப்புகள் அதிகரிக்க வாய்ப்புள்ளதால் பொதுமக்கள் கொரோனா தடுப்பு அணுகுமுறைகளை முறையாக கடைப்பிடிக்க வேண்டும் என எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. இதுதொடர்பாக, சுகாதார செயலாளர் ராஜேஷ் பூஷண் கூறியதாவது:-

கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளில் முக கவசம் அணிவது, கைகளை ஒழுங்காக கழுவுவது மற்றும் சமூக இடைவெளியை கடைப்பிடித்தல் ஆகியவை முக்கியத்துவம் வாய்ந்தது.

கேரளா, கர்நாடகம், மேற்கு வங்காளம், மகாராஷ்டிரா மற்றும் டெல்லி ஆகிய 5 மாநிலங்களில் பண்டிகை காலங்களில் கொரோனா பாதிப்புகள் அதிகரித்து உள்ளன என எங்களுக்கு தெரிய வந்துள்ளது.

kerala,karnataka,west bengal,maharashtra,delhi ,கேரளா,கர்நாடகம்,மேற்கு வங்காளம்,மகாராஷ்டிரா,டெல்லி

கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா பாதிப்புகளால் உயிரிழந்தோர் எண்ணிக்கை சத்தீஸ்கர், கர்நாடகம், மேற்கு வங்காளம், மகாராஷ்டிரா மற்றும் டெல்லி ஆகிய 5 மாநிலங்களில் 58 சதவீதம் என்ற அளவில் உள்ளது.

இதேபோல், கேரளா (4,287), கர்நாடகம் (3,130), மேற்கு வங்காளம் (4,121), மகாராஷ்டிரா (3,645) மற்றும் டெல்லி (2,832) ஆகிய 5 மாநிலங்களில் 49.4 சதவீத கொரோனா பாதிப்புகள் ஏற்பட்டு உள்ளன.

இந்த மாநிலங்களுடன் நாங்கள் தொடர்ந்து தொடர்பில் இருந்து வருகிறோம். இதற்காக குழுக்கள் அனுப்பி வைக்கப்பட்டு உள்ளன. அவர்கள் அளிக்கும் அறிக்கைகளின் அடிப்படையில், கொரோனாவை எதிர்கொள்வது பற்றி அந்தந்த மாநிலங்களுடன் நாங்கள் மீண்டும் பேசுவோம் என தெரிவித்துள்ளார்.

Tags :
|