Advertisement

திருப்பூர் மாவட்டத்தில் டெங்கு காய்ச்சல் அதிகரிப்பு

By: Monisha Mon, 23 Nov 2020 08:55:38 AM

திருப்பூர் மாவட்டத்தில் டெங்கு காய்ச்சல் அதிகரிப்பு

திருப்பூர் மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு கடந்த காலங்களை விட தற்போது குறைந்து வருகிறது. இந்நிலையில் மழையின் காரணமாக மாவட்டத்தில் டெங்கு காய்ச்சல் அதிகரித்து வருகிறது.

திருப்பூர் மாவட்டத்தில் அவ்வப்போது மழை பெய்து வருகிறது. இதனால் பல்வேறு இடங்களில் மழைநீர் தேங்கியுள்ளது. இதன் காரணமாக தற்போது கொசுக்கள் உற்பத்தியாகி டெங்கு காய்ச்சல் மீண்டும் அதிகரிக்க தொடங்கியுள்ளது. டெங்கு காய்ச்சல் உறுதி செய்யப்படுகிறவர்களும் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

அதன்படி கடந்த செப்டம்பர் மாதத்தில் 4 பேரும், அக்டோபர் மாதத்தில் ஒருவரும் டெங்குவால் பாதிக்கப்பட்டனர். நடப்பு மாதத்தில் இதுவரை 8 பேர் டெங்குவால் பாதிக்கப்பட்டு அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்றுள்ளனர்.

tirupur,dengue fever,rain,mosquitoes,treatment ,திருப்பூர்,டெங்கு காய்ச்சல்,மழை,கொசுக்கள்,சிகிச்சை

எனவே மாவட்ட மற்றும் மாநகராட்சி நிர்வாகம் டெங்கு கொசு ஒழிப்பு பணிகளை தீவிரப்படுத்த வேண்டும். கொரோனாவை காரணம் காட்டி இந்த பணிகளை மேற்கொள்ளாமல் காலம் தாழ்த்த கூடாது. மேலும், விரைவாக கொசு ஒழிப்பு பணிகளை மேற்கொள்ள வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags :
|