Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • மேட்டூர் அணையிலிருந்து கால்வாய் பாசனத்திற்கு திறக்கப்படும் நீரின் அளவு அதிகரிப்பு

மேட்டூர் அணையிலிருந்து கால்வாய் பாசனத்திற்கு திறக்கப்படும் நீரின் அளவு அதிகரிப்பு

By: Monisha Mon, 14 Dec 2020 1:02:28 PM

மேட்டூர் அணையிலிருந்து கால்வாய் பாசனத்திற்கு திறக்கப்படும் நீரின் அளவு அதிகரிப்பு

தமிழகம் முழுவதும் கடந்த சில தினங்களுக்கு முன்பு பரவலாக மழை பெய்தது. இதனால் டெல்டா பாசன பகுதிகளில் தண்ணீர் தேவை முற்றிலும் குறைந்தது. அதே நேரத்தில் காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளிலும் மழை பெய்து வந்தது. இதனால் மேட்டூர் அணைக்கு நீர்வரத்து சற்று அதிகரித்து காணப்பட்டது.

இந்த நிலையில் தற்போது மழை பெய்யாததால் மேட்டூர் அணைக்கு நீர்வரத்து படிப்படியாக குறைய தொடங்கியுள்ளது. அதாவது நேற்று அணைக்கு வினாடிக்கு 6 ஆயிரத்து 72 கனஅடி வீதம் தண்ணீர் வந்து கொண்டிருந்தது.

mettur dam,cauvery,canal,irrigation,water level ,மேட்டூர்அணை,காவிரி,கால்வாய்,பாசனம்,நீர்மட்டம்

இன்று மேட்டூர் அணைக்கு நீர்வரத்து மேலும் குறைந்து வினாடிக்கு 5 ஆயிரத்து 131 கனஅடியாக உள்ளது. அணையில் இருந்து கால்வாய் பாசனத்திற்காக திறக்கப்பட்ட தண்ணீர் வினாடிக்கு 700 கனஅடியில் இருந்து 800 கனஅடியாக அதிகரிக்கப்பட்டது.

டெல்டா பாசனத்திற்காக மேட்டூர் அணையிலிருந்து வினாடிக்கு 500 கனஅடி தண்ணீர் திறந்து விடப்பட்டு வருகிறது. தற்போது அணையின் நீர்மட்டம் 105.69 அடியாக உள்ள‌து. மேலும் அணையின் நீர் இருப்பு 72.41 டி.எம்.சி. யாக உள்ளது.

Tags :
|