Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • பொங்கல் விடுமுறையையொட்டி சிறப்பு ரெயில்களில் டிக்கெட் முன்பதிவு அதிகரிப்பு

பொங்கல் விடுமுறையையொட்டி சிறப்பு ரெயில்களில் டிக்கெட் முன்பதிவு அதிகரிப்பு

By: Monisha Mon, 30 Nov 2020 5:22:40 PM

பொங்கல் விடுமுறையையொட்டி சிறப்பு ரெயில்களில் டிக்கெட் முன்பதிவு அதிகரிப்பு

கொரோனா பாதிப்புக்கு பின் தமிழகத்தில் பல்வேறு நகரங்களுக்கு 13 சிறப்பு ரெயில்கள் இயக்கப்பட்டு வருகிறது. இந்த ரெயில்களில் முன்பதிவு செய்த பயணிகள் மட்டுமே பயணம் செய்ய முடியும். முன்பதிவு அல்லாத சாதாரண டிக்கெட்டுகள் இன்னும் விநியோகிக்கப்படவில்லை.

இந்த நிலையில் பொங்கல் பண்டிகை விடுமுறை ஜனவரி 14-ந் தேதி முதல் 17-ந் தேதி வரை வருகிறது. இதையொட்டி சிறப்பு ரெயில்களில் டிக்கெட் முன்பதிவு தொடங்கப்பட்டுள்ளது. இதையடுத்து முன்பதிவு செய்ய பொதுமக்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர்.

pongal,holidays,special train,tickets,booking ,பொங்கல்,விடுமுறை,சிறப்பு ரெயில்,டிக்கெட்,முன்பதிவு

12, 13-ந் தேதிகளில் எக்ஸ்பிரஸ் ரெயில்களில் 2-ம் படுக்கை வசதி கொண்ட படுக்கைகள் பெரும்பாலும் நிரம்பிவிட்டன. குறிப்பாக தென் மாவட்டங்களுக்கு இயக்கப்படும் சிறப்பு ரெயில்களில் 70 சதவீத இடங்கள் நிறைவடைந்து விட்டன. ஏ.சி. பெட்டிகள் மட்டுமே காலியாக உள்ளன.

அடுத்த மாதம் இறுதியில் பயணிகள் தேவை குறித்து ஆய்வு நடத்தப்பட்டு வாய்ப்பு உள்ள ரெயில்களில் கூடுதல் பெட்டிகள் இணைப்பது, சிறப்பு ரெயில்கள் இயக்குவது போன்ற நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று ரயில்வே அதிகாரிகள் தெரிவித்தனர்.

Tags :
|