Advertisement

மதுரையில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 2201 ஆக அதிகரிப்பு

By: Monisha Mon, 29 June 2020 1:51:23 PM

மதுரையில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 2201 ஆக அதிகரிப்பு

மதுரையில் இன்று 206 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் பாதிப்பு எண்ணிக்கை 2201 ஆக அதிகரித்துள்ளது.

தமிழகத்தில் கொரோனா வைரஸ் கடுமையாக பரவி வருகுது. நேற்று மாலை நிலவரப்படி மாநிலத்தில் 82,275 பேருக்கு கொரோனா தொற்று உறதி செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் இதுவரை 1079 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர். இதுவரை நோய் பாதிப்பில் இருந்து மொத்தம் 45,537 பேர் குணமடைந்துள்ளனர்.

தமிழகத்தில் குறிப்பாக சென்னையில் கொரோனா பாதிப்பு 50 ஆயிரத்தை தாண்டியுள்ளது. இதுவரை மாவட்டத்தில் 53,762 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், 31858 பேர் குணமடைந்துள்ளனர். 809 பேர் உயிரிழந்துள்ளனர். 21094 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

 ,மதுரை,கொரோனா வைரஸ்,பாதிப்பு,பலி,சிகிச்சை

சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் மாவட்டத்தில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. மதுரையிலும் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால் அங்கும் முழு ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது.

கடந்த சில நாட்களாக மதுரையில் 100 என்ற அளவில் கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டது. இந்நிலையில் இன்று 206 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மொத்த எண்ணிக்கை 2201 ஆக அதிகரித்துள்ளது. மதுரையில் இதுவரை 591 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். மேலும் மாவட்டத்தில் 25 பேர் பலியாகியுள்ளனர்.

Tags :