Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • திருமண நிகழ்வில் பங்கேற்பவர்களின் எண்ணிக்கை உயர்த்தப்பட்டது; சுகாதார அமைச்சு தகவல்

திருமண நிகழ்வில் பங்கேற்பவர்களின் எண்ணிக்கை உயர்த்தப்பட்டது; சுகாதார அமைச்சு தகவல்

By: Nagaraj Thu, 25 June 2020 5:42:03 PM

திருமண நிகழ்வில் பங்கேற்பவர்களின் எண்ணிக்கை உயர்த்தப்பட்டது; சுகாதார அமைச்சு தகவல்

திருமண வைபவமொன்றில் கலந்துகொள்பவர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

அதற்கமைய திருமண வைபவமொன்றில் 200 பேர் வரையில் கலந்துகொள்வது தொடர்பாக ஆராய்ந்து வருவதாக அந்த அமைச்சு மேலும் குறிப்பிட்டுள்ளளது.

நாட்டில் கொரோனா வைரஸின் தாக்கம் அதிகரித்தமையைத் தொடர்ந்து, ஊரடங்கு அமுல்படுத்தப்பட்டதுடன், பல கட்டுப்பாடுகளும் விதிக்கப்பட்டன. குறிப்பாக திருமணம் உள்ளிட்ட மக்கள் கூடும் நிகழ்வுகளுக்கு தடை விதிக்கப்பட்டது.

ministry of health,marriage,event,number,promotion ,சுகாதார அமைச்சு, திருமணம், நிகழ்வு, எண்ணிக்கை, உயர்வு

இதனையடுத்து, நாட்டில் கொரோனா வைரஸின் தாக்கம் ஓரளவு குறைந்த நிலையில், நாட்டில் நடைமுறைப்படுத்தப்பட்டிருந்த கட்டுபாடுகள் கட்டம் கட்டமாக தளர்த்தப்பட்டு வருகின்றன.

அதற்கமைய கடந்த மே மாதத்திற்கு பின்னர் சுகாதார வழிமுறைகளைப் பின்பற்றி திருமண நிகழ்வுகளில் 100 பேர் வரையில் கலந்துகொள்ள முடியுமென அறிவிக்கப்பட்டது. இந்நிலையில், நாடு வழமைக்கு திரும்பியதையடுத்து, குறித்த எண்ணிக்கையினை அதிகரிப்பது தொடர்பாக கவனம் செலுத்தியுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

Tags :
|
|