Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • கோவாவில் கடந்த 10 நாட்களாக அதிகரித்து வரும் கொரோனா தொற்று

கோவாவில் கடந்த 10 நாட்களாக அதிகரித்து வரும் கொரோனா தொற்று

By: Nagaraj Sun, 24 May 2020 8:47:38 PM

கோவாவில் கடந்த 10 நாட்களாக அதிகரித்து வரும் கொரோனா தொற்று

கடந்த 10 நாட்களாக கொரோனா தொற்று அதிகரித்துக் கொண்டே வருவதால் கோவா மக்கள் மத்தியில் அச்சம் எழுந்துள்ளது. கோவா மாநிலத்தில் 54 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக மாநில சுகாதாரத் துறை அறிவித்துள்ளது.

கோவாவில் சமீப காலத்தில் கொரோனா தொற்று ஒன்று கூட இல்லாமல் இருந்த நிலையில் கடந்த பத்து நாட்களாக புதிதாக கொரோனா தொற்றுள்ளவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. மே 24ல் ரயில் மூலமாக கோவா வந்தடைந்த பயணிகள் 11 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.

state government,goa,corona,hospital,tourism ,
மாநில அரசு, கோவா, கொரோனா, மருத்துவமனை, சுற்றுலா தலம்

இதில் பெரும்பாலும் டில்லி, மஹாராஷ்டிராவிலிருந்து வந்துள்ளனர். இதையடுத்து வெளிமாநிலங்களில் இருந்து கோவா வருபவர்களிடம் பரிசோதனைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. கோவாவிற்கு வரும் பயணிகள் அனைவரும் 14 நாட்கள் தனிமைப்படுத்தப்படுவது அவசியமாக்கப்பட்டுள்ளது. பயணிகள் கொரோனா தொற்று இல்லை என்ற சான்றிதழை அங்கீகரிக்கப்பட்ட மையத்திலிருந்து பெற்றிருக்க வேண்டும்.

தொற்று எண்ணிக்கை அதிகரிப்பதால் தெற்கு கோவாவில் உள்ள கொரோனா மருத்துவமனையில் படுக்கைகளின் எண்ணிக்கை 170ல் இருந்து 200 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், சுற்றுலா துறை முடங்கியிருப்பதால் மாநிலத்தில் பொருளாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது. இதனால், உள்ளூர் மக்கள் சுற்றுலா தலங்களுக்கு செல்ல மாநில அரசு அனுமதி அளித்துள்ளது.

Tags :
|
|