Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • சுற்றுலா பயணிகள் வருகை அதிகரிப்பால் களைகட்டிய கொடைக்கானல்

சுற்றுலா பயணிகள் வருகை அதிகரிப்பால் களைகட்டிய கொடைக்கானல்

By: Monisha Thu, 10 Sept 2020 10:24:45 AM

சுற்றுலா பயணிகள் வருகை அதிகரிப்பால் களைகட்டிய கொடைக்கானல்

கொரோனா வைரஸ் பரவல் காரணமாக கொடைக்கானலுக்கு சுற்றுலா பயணிகள் வருவதற்கு தடை விதிக்கப்பட்டது. இதனால் கடந்த 5 மாதங்களாக கொடைக்கானலில் உள்ள அனைத்து சுற்றுலா தலங்களும் மூடப்பட்டு வெறிச்சோடின. இந்தநிலையில் நேற்று முதல் கொடைக்கானலுக்கு சுற்றுலா பயணிகள் அனுமதிக்கப்பட்டனர்.

கொடைக்கானலுக்கு வருகை தருகிற திண்டுக்கல் மாவட்டத்தை சேர்ந்தவர்கள் ஆதார் உள்ளிட்ட அடையாள அட்டைகளை காண்பிக்க வேண்டும் என்றும், வெளி மாவட்ட சுற்றுலா பயணிகள் இ-பாஸ் பெற்று வர வேண்டும் என்றும் மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தி உள்ளது.

சுற்றுலா பயணிகளின் வருகை எதிரொலியாக, கொடைக்கானலில் உள்ள பிரையண்ட் பூங்கா, ரோஜா பூங்கா, செட்டியார் பூங்கா ஆகியவை நேற்று காலை 9 மணிக்கு திறக்கப்பட்டன. இங்கு வருகை தந்த சுற்றுலா பயணிகளுக்கு, தோட்டக்கலை அலுவலர் சிவபாலன் பூங்கொத்து கொடுத்து வரவேற்றார்.

tourists,kodaikanal,e pass,park,boat ride ,சுற்றுலா பயணிகள்,கொடைக்கானல்,இ பாஸ்,பூங்கா,படகு சவாரி

பல ஏக்கர் பரப்பளவில் பரந்து விரிந்து காட்சியளிக்கும் பிரையண்ட் பூங்காவில் பல வண்ண பூக்கள் பூத்துக்குலுங்குவது வாடிக்கை. ஆனால் தற்போது பெரும்பாலான செடிகள் பூக்கள் இன்றி காணப்பட்டன. நேற்று காலை முதல் மாலை வரை சுமார் 250-க்கும் மேற்பட்ட சுற்றுலா பயணிகளின் பிரையண்ட் பூங்காவை கண்டுகளித்தனர்.

கொடைக்கானல் என்றவுடன், சுற்றுலா பயணிகளின் மனதில் நீங்காத இடத்தை பிடிப்பது அங்கு நடைபெறும் படகு சவாரி தான். நகரின் மையப்பகுதியில் நட்சத்திர வடிவில் அமைந்துள்ள ஏரியில் படகு சவாரி நடைபெறுவது வழக்கம். ஆனால் தற்போது படகு சவாரிக்கு அனுமதி அளிக்கப்படவில்லை. இதனால் சுற்றுலா பயணிகள் ஏமாற்றம் அடைந்தனர்.

கொடைக்கானலை பொறுத்தவரை இயற்கை எழில்கொஞ்சும் 30 சுற்றுலா இடங்கள் உள்ளன. இதில் நகர்ப்பகுதியில் பார்க்கக்கூடிய இடங்கள் 16-ம், வனப்பகுதியில் 14 இடங்களும் அடங்கும். தற்போது நகர்ப்பகுதியில் உள்ள 3 பூங்காக்கள் திறக்கப்பட்டு சுற்றுலா பயணிகள் பார்வையிட அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

Tags :
|
|