Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • லடாக் எல்லையில் 2 சாலைகளை இந்தியா கட்டமைக்கிறது; அதிகாரிகள் தகவல்

லடாக் எல்லையில் 2 சாலைகளை இந்தியா கட்டமைக்கிறது; அதிகாரிகள் தகவல்

By: Nagaraj Tue, 09 June 2020 4:34:51 PM

லடாக் எல்லையில் 2 சாலைகளை இந்தியா கட்டமைக்கிறது; அதிகாரிகள் தகவல்

2 சாலைகள் கட்டமைப்பு... சீனாவுடன் மோதல் போக்கு நிலவும் நிலையில், லடாக்கில் எல்லையில் 2 சாலைகளை இந்தியா கட்டமைத்து வருவதாக அதிகாரிகள் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

லடாக் எல்லையில் இந்தியா, சீனா ராணுவ வீரர்கள் இடையே கடந்த ஒரு மாதத்துக்கும் மேலாக மோதல் போக்கு நிலவுகிறது. இருநாட்டு ராணுவ வீரர்களும் அங்கு அதிக எண்ணிக்கையில் குவிக்கப்பட்டு உள்ளதால் பதற்றம் ஏற்பட்டுள்ளது.

இந்த பதற்றத்துக்கு மத்தியிலும் லடாக்கின் கிழக்குப் பகுதியில் ராணுவ முக்கியத்துவம் வாய்ந்த பகுதியை இணைக்கும் வகையில் 2 சாலைகளை இந்தியா கட்டமைத்து வருவதாக அதிகாரிகள் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

roads,organization,officers,military importance,connecting ,சாலைகள், அமைப்பு, அதிகாரிகள், ராணுவ முக்கியத்துவம், இணைக்கும்

தார்புக்-சியோக்-தெளலத் பெக் ஓல்டி (Darbuk-Shyok-Daulat Beg Oldi) இடையே ஒரு சாலையும், சாசோமா- சாசர் லா (Sasoma to Saser La) இடையே இன்னொரு சாலையையும் இந்தியா கட்டமைத்து வருகிறது.
இதில் எல்லை சாலைகள் அமைப்பு ((Border Roads Organisation)) ஊழியர்கள் 11 ஆயிரத்து 815 பேர் ஈடுபட்டுள்ளனர் எனவும் அதிகாரிகள் வட்டாரங்கள் குறிப்பிட்டுள்ளன.

Tags :
|