Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • இந்தியா- சீனா எல்லைப்பகுதியில் லாரி பளு தாங்காமல் மீண்டும் இடிந்து விழுந்த இரும்பு பாலம்

இந்தியா- சீனா எல்லைப்பகுதியில் லாரி பளு தாங்காமல் மீண்டும் இடிந்து விழுந்த இரும்பு பாலம்

By: Nagaraj Sun, 28 June 2020 3:49:24 PM

இந்தியா- சீனா எல்லைப்பகுதியில் லாரி பளு தாங்காமல் மீண்டும் இடிந்து விழுந்த இரும்பு பாலம்

மீண்டும் இடிந்து விழுந்த பாலம்... இந்திய, சீன எல்லைப் பகுதியில் ஏற்கனவே இடிந்து விழுந்ததால் மீண்டும் கட்டப்பட்ட பாலம் 5 நாட்களில் மீண்டும் இடிந்து விழுந்தது.

உத்தரகாண்ட் மாநிலத்தில் இந்திய, சீன எல்லையில் 65 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள பிதோரகார் என்ற இடத்தில் கடந்த 22ம் தேதி மணல் அள்ளும் இயந்திரத்தை ஏற்றி வந்த லாரி அங்கு கட்டப்பட்டிருந்த இரும்புப் பாலத்தைக் கடக்க முயன்ற போது, சரிந்து விழுந்து விபத்துக்குள்ளானது.

bridge,uttarakhand,5 day,demolished,lorry ,பாலம், உத்தரகாண்ட், 5 நாள், இடிந்து விழுந்தது, லாரி

இந்த விபத்தில் லாரி ஓட்டுநர் உள்ளிட்ட இருவர் படுகாயமடைந்தனர். இந்நிலையில் இடிந்து விழுந்த பாலம் எல்லைச் சாலைகள் கழகம் சார்பில் மீண்டும் கட்டமைக்கப்பட்டது.

இந்தப் பாலத்தின் மூலம் எல்லை பாதுகாப்புப் படை, இந்தோ திபெத் எல்லைப்படை மற்றும் மலைவாழ் மக்களுக்கு உணவுப் பொருட்கள் விநியோகிக்கப்பட்டு வந்தன. இந்த நிலையில் ஐந்தே நாட்களில் இந்தப் பாலம் மீண்டும் இடிந்து விழுந்ததாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

இதனால் சுமார் 7 ஆயிரம் பேர் உணவுப் பொருட்களைப் பெற முடியாமல் தவித்து வருவதாகக் கூறப்படுகிறது.

Tags :
|
|