Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • இந்தியா- சீனா இராணுவ உயர் அதிகாரிகள் பேச்சு வார்த்தை நிறைவு

இந்தியா- சீனா இராணுவ உயர் அதிகாரிகள் பேச்சு வார்த்தை நிறைவு

By: Nagaraj Sat, 06 June 2020 7:28:11 PM

இந்தியா- சீனா இராணுவ உயர் அதிகாரிகள் பேச்சு வார்த்தை நிறைவு

இந்திய - சீன எல்லை தொடர்பாக இரு நாடுகளின் இராணுவ உயர் அதிகாரிகள் மட்டத்திலான பேச்சுவார்த்தை நிறைவடைந்துள்ளது.

இந்திய எல்லை பகுதியில் கடந்த மாதங்களாக சீன இராணுவம் அத்துமீறி நுழைந்து வந்தது. இதனால் இந்திய - சீன எல்லைப்பகுதியில் பதற்றம் நிலவிய நிலையில், இருநாடுகளும் தங்களின் இராணுவ படைகளை எல்லை பகுதியில் குவித்து வந்தது.

மேலும், சீன அதிபர் ஜின் பிங் அந்நாட்டு நாடாளுமன்றத்தில் உரையாற்றுகையில் இராணுவம் போர் சூழலுக்கு தயாராக கூறி ஆணையிட்டார். இதனால் சீன - இந்திய எல்லையில் பதற்றம் அதிகரிக்கவே, இருநாட்டிற்கும் இடையே போர் ஏற்படலாம் என்று உலக நாடுகள் அச்சத்திற்கு உள்ளானது.

இரு நாடுகளுக்கு இடையே உள்ள பிரச்சனையை பேசி சரி செய்துகொள்ள ஐ.நா அறிவுறுத்தியிருந்தது. மேலும், இந்தியா விரும்பினால் இந்திய - சீன எல்லை பிரச்சனையில் மத்தியஸ்தம் செய்ய தயார் என அமெரிக்க அதிபர் டிரம்ப் அறிவித்து இருந்தார்.

speech,border dispute,closure,military,high officials ,பேச்சு வார்த்தை, எல்லை பிரச்னை, நிறைவு, இராணுவம், உயர் அதிகாரிகள்

இந்நிலையில், இந்திய - சீன எல்லை தொடர்பாக இரு நாடுகளின் இராணுவ உயர் அதிகாரிகள் மட்டத்திலான பேச்சுவார்த்தை நிறைவடைந்துள்ளது. இந்த பேச்சுவார்த்தையில் இந்திய தரப்பில் இராணுவ கமாண்டர் லெப்டினல் ஜெனரல் ஹரீந்தர் சிங் கலந்துகொண்டார்.

லடாக் எல்லை பிரச்சனை தொடர்பாக இருநாட்டு இராணுவ உயர் அதிகாரிகளின் மட்டத்திலான பேச்சுவார்த்தை நிறைவு பெற்றுள்ளது. மால்டோ பகுதியில் இந்திய - சீன இராணுவ உயர் அதிகாரிகளின் பேச்சுவார்தையானது நடைபெற்றது. இந்திய அதிகாரிகள் லே பகுதிக்கு திரும்பியுள்ளனர்.

Tags :
|