Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • எல்லை பதற்றம் குறித்து இந்தியா - சீனா காணொலி வாயிலாக பேச்சுவார்த்தை

எல்லை பதற்றம் குறித்து இந்தியா - சீனா காணொலி வாயிலாக பேச்சுவார்த்தை

By: Nagaraj Thu, 01 Oct 2020 6:51:19 PM

எல்லை பதற்றம் குறித்து இந்தியா - சீனா காணொலி வாயிலாக பேச்சுவார்த்தை

எல்லையில் பதற்றம் நிலவி வரும் நிலையில் இந்தியாவும், சீனாவும் காணொலி காட்சி மூலம் பேச்சுவார்த்தை நடத்தி உள்ளது.

இந்தியா சீனா எல்லை பகுதிகளில் மே மாதம் முதலே பதற்றம் நிலவி வருகிறது. அப்போது நடைபெற்ற மோதலில் இருதரப்பிலும் வீரர்கள் உயிரிழந்தனர். பேச்சுவார்த்தையில் சுமுக முடிவு எட்டப்பட்டாலும் சீனா தமது எல்லையில் படைகளை குவித்து வருகிறது.

boundary,tension,negotiation,video,agreements ,எல்லை, பதற்றம், பேச்சுவார்த்தை, காணொலி, உடன்பாடுகள்

இதனையடுத்து இந்தியாவும் பாதுகாப்பை பலப்படுத்தும் பொருட்டு இந்தியப் படைகளை இன்னும் அதிகமாக குவித்து வருகிறது.
இந்நிலையில் இந்திய-சீன வெளியுறவுத்துறை அமைச்சர்களிடையே நடத்தப்பட்ட பேச்சுவார்த்தையில் 5 அம்ச உடன்படிக்கை செய்யப்பட்டது.

இதனை விரைந்து செயல்படுத்தும் முறைகள் குறித்து இந்தியா, சீனா ராஜ்யரீதியிலான புதிய சுற்று பேச்சுவார்த்தை காணொலி மூலம் நடைபெற்றது. இதுகுறித்து சீன வெளியுறவுத்துறை அமைச்சகம் செய்தி ஒன்றை வெளியிட்டுள்ளது. அதன்படி இந்தியா சீனா எல்லை பிரச்சினையில் இது 19வது கூட்டம். விரைவில் 5 அம்ச உடன்பாடுகள் அமுல்படுத்தப்படும் என தெரிவித்துள்ளார்.

Tags :
|