Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • 89 செயலிகளை ஸ்மார்ட்போன்களில் இருந்து நீக்க வீரர்களுக்கு இந்திய ராணுவம் உத்தரவு

89 செயலிகளை ஸ்மார்ட்போன்களில் இருந்து நீக்க வீரர்களுக்கு இந்திய ராணுவம் உத்தரவு

By: Karunakaran Thu, 09 July 2020 10:08:45 AM

89 செயலிகளை ஸ்மார்ட்போன்களில் இருந்து நீக்க வீரர்களுக்கு இந்திய ராணுவம் உத்தரவு

லடாக் எல்லையில் உள்ள கல்வான் பள்ளத்தாக்கு பகுதியில் கடந்த மாதம் 15-ம் தேதி இந்திய- சீன வீரர்களிடையே மோதல் ஏற்பட்டது. இதில் இந்திய வீரர்கள் 20 பேர் உயிரிழந்தனர். இந்த மோதலுக்கு பின் எல்லையில் பதற்றம் நிலவியது. இதனால் இரு நாட்டு ராணுவப் படைகளும் எல்லைக் கட்டுப்பாட்டு பகுதியில் குவிக்கப்பட்டன.

லடாக் அருகே உள்ள விமானப்படை தளத்தில் போர் விமானங்கள் தயார் நிலையில் நிலைநிறுத்தப்பட்டன. இருப்பினும் இரு நாட்டு ராணுவ கமாண்டர்கள் மட்டத்தில் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. இதில் சுமூக நிலை ஏற்பட்டதால், சீனப் படைகள் கல்வான் மோதல் நடத்த பகுதியில் இருந்து சுமார் 2 கி.மீ. தூரத்திற்கு விலகி சென்றன.

indian army,soldires,smartphones,89 apps ,இந்திய ராணுவம், வீரர்கள், ஸ்மார்ட்போன்கள், 89 செயலிகள்

இந்தியாவில் டிக்டாக், யுசி பிரவுசெர், ஹலோ சாட் உள்ளிட்ட 59 சீன செயலிகளுக்கு மத்திய அரசு ஏற்கனவே தடை விதித்திருந்தது. இந்நிலையில் டிக்டாக், பேஸ்புக் உள்ளிட்ட 89 செயலிகளை ஸ்மார்ட்போன்களில் இருந்து நீக்க வேண்டும் என வீரர்களுக்கு இந்திய ராணுவம் உத்தரவிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இதுகுறித்து ஏஎன்ஐ நிறுவனம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், பேஸ்புக், டிக்டாக், ட்ரூ காலர், இன்ஸ்டாகிராம், வி சாட், ஹலோ சாட், ஷேர் சாட், ஹைக், ஷேர் ஹிட், செண்டெர், யூசி பிரவுசெர், யுசி பிரசெர் மினி, ஷூம், கேம் ஸ்கேன்னர், பியூட்டி பிளஸ், பப்ஜி, கிளாஸ் ஆஃப் கிங்ஸ், மொபைல் லிஜெண்ட்ஸ், கிளப் ஃபேக்டரி, டிண்டெர், 360 செக்யூரிட்டி, ஸ்நாப் சாட், தம்பிர், ரெட்டிட் போன்ற 89 செயலிகளை ராணுவ வீரர்கள் தங்கள் ஸ்மார்ட்போன்களில் இருந்து நீக்க வேண்டும் என இந்திய ராணுவம் தெரிவித்துள்ளதாக தகவல் வெளியிட்டுள்ளது.

Tags :